மிடில் கிளாஸ் குடும்பம்.. நம்பவே முடியல.. தோனியின் அட்வைஸ் ஹெல்ப் பண்ணும்.. துருவ் ஜுரேல் பேட்டி

Dhruv Jurel
- Advertisement -

வரும் ஜனவரி 25ஆம் தேதி முதல் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் கிரிக்கெட் விளையாட உள்ளது. அந்த தொடரில் விளையாடப் போகும் முதலிரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத், கேஎல் ராகுல் ஆகியோருடன் இளம் வீரர் துருவ் ஜுரேல் தேர்வாகியுள்ளது ரசிகர்கள் எதிர்பாராததாக அமைந்தது.

உத்திரபிரதேசத்தை சேர்ந்த சேர்ந்த வெறும் 22 வயது மட்டுமே நிரம்பிய அவர் 2020 அண்டர்-19 உலகக் கோப்பையில் ஃபைனல் வரை சென்ற இந்திய அணியில் விளையாடி உள்ளூர் போட்டிகளிலும் விளையாடினார். உள்ளூரில் 15 முதல் தர போட்டிகளில் விளையாடி 46 என்ற சராசரியில் ரன்கள் குவித்துள்ள அவர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் கடந்த வருடம் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

- Advertisement -

தோனியின் அட்வைஸ்:
இந்நிலையில் இந்தியாவுக்காக தேர்வாகியுள்ள மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த தாம் இந்த வாய்ப்பை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என துருவ் ஜுரேல் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் தோனியை சந்தித்த போது அவர் சொன்ன வார்த்தைகளை உத்வேகமாக வைத்திருப்பதாக தெரிவிக்கும் ஜுரேல் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு.

“நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். ஒவ்வொரு குழந்தையும் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்றே பேட்யை கையிலெடுக்கும். இன்று நான் எங்கே இருக்கிறேன் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது உண்மையா என்று எனக்கே வியப்பாக இருக்கிறது. ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த பையனாக இது எப்படி நடந்தது என்பதை நினைத்து இப்போதும் நான் வியப்படைகிறேன்

- Advertisement -

“ஏனெனில் நாட்டுக்காக விளையாட ஏராளமான போட்டி இருக்கும் நிலையில் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதும் அதற்கு முக்கிய காரணமாக இருந்த அம்மா, அப்பா மற்றும் சகோதரியுடன் நான் பேசினேன். நான் தோனியின் பெரிய ரசிகன். கடந்த வருடம் அவரிடம் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது “அடுத்த பந்தில் கவனம் செலுத்தாதீர்கள். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்” என்று அவர் சொன்னார்”

இதையும் படிங்க: ரவீந்திர ஜடேஜாவை விட அக்சர் படேல் டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரர் என்று தெரிவித்த பார்திவ் பட்டேல்

“அதில் தான் நிறைய அழுத்தம் வரும் என்று அவர் சொன்னார். மேலும் ஏற்கனவே நிறைய உழைத்ததால் தான் இங்கே நீ இருக்கிறாய் என்றும் என்னிடம் சொன்ன தோனி பந்தை மட்டும் பார்த்து கவனம் செலுத்துமாறு சொன்னார். அத்துடன் “உங்களை எப்போதும் சந்தேகப்படாமல் பந்தை மட்டும் பார்த்து விளையாடுங்கள். முடிவை பற்றி கவலைப்படாமல் செயலில் கவனம் செலுத்துங்கள்” என்று தோனி என்னிடம் கூறினார்” என தெரிவித்தார்.

Advertisement