- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கடைசி போட்டியில் இருந்து வெளியேறிய ரிஷப் பண்டுக்கு பதிலாக விளையாடப்போவது யார்? – விவரம் இதோ

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு ஆட்டங்கள் முடிவடைந்துள்ள வேளையில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ரிஷப் பண்டிற்கு பதிலாக விளையாடப்போவது யார்? :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் ஜூலை 31-ஆம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியானது இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் இந்த கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்ய முடியும் என்பதனால் இந்த போட்டியானது இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாக மாறியுள்ளது. இந்த இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் காயம் காரணமாக வெளியேறியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் இடம் பெற்று விளையாடப்போகும் அந்த வீரர் யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய அணியில் தமிழக வீரரான நாராயணன் ஜெகதீசன் இணைக்கப்பட்டார். ஆனாலும் அவருக்கு உடனடியாக அறிமுக வாய்ப்பு கிடைப்பது கடினம்.

- Advertisement -

அதே வேளையில் ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக ஏற்கனவே கூடுதல் விக்கெட் கீப்பராக இந்திய அணியில் நீடிக்கும் துருவ் ஜுரேல் ஐந்தாவது போட்டியில் களம் இறங்குவார் என்று தெரிகிறது. ஏனெனில் ஏற்கனவே இந்திய அணிக்காக கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான துருவ் ஜுரேல் இதுவரை இந்திய அணிக்காக நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி :

இதையும் படிங்க : இந்த விடயத்திற்காக ரிஷப் பண்டை எவ்ளோ பாராட்டினாலும் அது பத்தாது – வீரர்களிடையே பேசிய கம்பீர்

ஒரு அரைசதத்துடன் 202 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இதன் காரணமாக அவருக்கே இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. அதுமட்டுமின்றி ஏற்கனவே இந்த தொடரில் ரிஷப் பண்ட்டிற்கு காயம் ஏற்பட்ட போதெல்லாம் துருவ் ஜூரேலே விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -