16 வருஷா விளையாடியும் தோனி காயமடையாமல் விளையாட இதுவே காரணம் – சூப்பர் நியூஸ் சொன்ன பிட்னஸ் கோச்

Dhoni-2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை தோனி தலைமையில் கைப்பற்றியது. இந்த தொடரில் விளையாடிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மட்டுமின்றி உடற்தகுதி விஷயத்திலும் கட்டுக்கோப்புடன் இருந்தது. அப்போதைய இந்திய அணி உடற்தகுதி விடயத்தில் அவ்வளவு சிறப்பாக இருக்க காரணம் யாதெனில் அப்போது இந்திய அணியின் உடற்பயிற்சியாளராக இருந்த ராம்ஜி ஸ்ரீனிவாசன் என்றே கூற வேண்டும். அந்த அளவிற்கு அவர் வீரர்களை தயார்படுத்தினார்.

- Advertisement -

ஏனெனில் அதற்கு முன்னர் இந்திய வீரர்களின் உடற்தகுதி அவ்வளவாக உற்றுநோக்கி பார்க்க படவில்லை என்றாலும் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றிக்குப் பின்னர் உடற்தகுதி குறித்த கவனம் இந்திய அணியில் ஏற்பட்டது. மேலும் அப்போதிலிருந்து வீரர்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஆரம்பித்தனர்.

இப்போது உள்ளவர்கள் சிக்ஸ்பேக் வைத்து இருக்கும் நேரத்தில் அப்போதுள்ள வீரர்கள் தங்களது தினசரி உடற் பயிற்சிகளை உடல் ஆரோக்கியத்திற்கும், சோர்வின்றி தொடர்ச்சியாக விளையாடவும் மேற்கொண்டனர் என்று ராம்ஜி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் சச்சின், சேவாக், ரோஹித் மற்றும் தோனி ஆகியோர் வெயிட் அதிகம் தூக்கும் பயிற்சிகளில் ஈடுபட வில்லை.

fitness

அவர்கள் தினசரி மேற்கொள்ளும் பயிற்சியை மட்டுமே தொடர்ச்சியாக ஈடுபடுவார்கள் தினமும் ஜிம்முக்கு வந்தாலும் வெயிட் விஷயங்களை அவர்கள் கையாளாமல் தோள்பட்டை மற்றும் மணிக்கட்டு ஆகியவைகளுக்கு மட்டும் பலப்படுத்தும் வகையிலேயே உடற்பயிற்சி செய்வார்கள் என்று ராம்ஜி சீனிவாசன் கூறினார்.

- Advertisement -

மேலும் தோனி குறித்து அவர் கூறுகையில் தோனி தினமும் ஜிம்மிற்கு வந்தாலும் அவருடைய உடற்பயிற்சி எப்பொழுதும் கடினமாக இருக்காது. ஏனெனில் அவர் இயற்கையாகவே கட்டுமஸ்தான உடல்வாகு உடையவர். இதனால் அவர் இயற்கையிலேயே ஆரோக்கியமான உடலமைப்பு மிகவும் பலமாக காணப்பட்டது என்று ராம்ஜி ஸ்ரீனிவாசன் கூறினார்.

dhonistand

இதன் காரணமாகவே தோனி அதிக அளவு காயப்படாமல் இத்தனை ஆண்டுகள் விளையாடி வருவதாகவும், கீப்பராக இருக்கும் ஒருவர் அடிபடாமல் இத்தனை ஆண்டுகள் விளையாடுவது சிறப்பான விடயம் என்றும் அவர் தோனியை பாராட்டி கூறியது குறிப்பிடத்தக்கது. தற்போது உள்ள இந்திய வீரர்களில் கோலி, ஐயர், ராகுல், பாண்டியா, பும்ரா மற்றும் மணிஷ் பண்டே என பலரும் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் படு அமர்க்களமாக உடல் தகுதியுடன் சிறப்பாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement