கங்குலியின் இந்த ஒரு முடிவால் மாறிய தோனியின் வாழ்க்கை. தோனி என்ற சகாப்தம் ஆரம்பித்த தருணம் – பிறந்தநாள் பதிவு

Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டனாக திகழ்ந்தவர் தோனி. அவரின் சாதனைகளை சொல்லி தெரியவேண்டியதில்லை அந்த அளவிற்கு ஏகப்பட்ட சாதனைகள் படைத்துள்ளது நாம் அறிந்ததே. அவரைப் பற்றி தனியாக இதுவும் விவரிக்கவில்லை என்றாலும் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடும் தோனிக்கு சமூக வலைதளம் மூலமாக ரசிகர்கள், வீரர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Dhoni

- Advertisement -

மேலும் தோனியின் ரசிகர்கள் அவரது இந்த பிறந்த தினத்தை வழக்கம்போல மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். உண்மையிலேயே தோனிக்கு பிறந்தநாள் என்றால் அது ஏப்ரல் 5 2005 ஆம் ஆண்டு தான். ஏனெனில் அன்றைய தினத்தில் தான் தோனி தன்னுடைய முழு திறமையையும் உலகிற்கு நிரூபித்து தனது தடத்தை சர்வதேச கிரிக்கெட்டில் பதிக்க ஆரம்பித்தார். அந்த நாள் குறித்து இந்த பதிவில் நாம் விரிவாகக் காண்போம்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்றது. இந்தியாவில் நடைபெற்ற இந்த ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் ஒரு போட்டி விசாகப்பட்டினத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதி 2005 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்தப் போட்டிக்கு பின்புதான் தோனியை உலகம் புகழ ஆரம்பித்தது. இந்த ஒருநாள் போட்டிக்கு முன்பாக தோனி இந்திய அணி 5 ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி இருந்தார்.

Dhoni 1

மேலும் அவரது அதிகபட்சமாக 12 ரன்கள் மட்டுமே இருந்தது. தனது முதல் ஒருநாள் போட்டியில் அதிர்ஷ்டம் இன்றி ரன்அவுட் ஆன தோனி பாகிஸ்தான் அணிக்கு எதிரான விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் சச்சின் சேவாக் களமிறங்கி நான்காவது ஓவரிலேயே சச்சின் அவுட் ஆகி வெளியேறியதால் அடுத்து டிராவிட் களமிறங்குவார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர் ஆனால் அப்போதுதான் தோனியின் விதியை மாற்றிய அந்த நிகழ்வு நடைபெற்றது.

- Advertisement -

அதாவது அதற்கு முன்னர் ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்ய அனுமதிக்கப் பட்டிருந்த தோனி அன்று கேப்டன் கங்குலியின் முடிவால் மூன்றாவது வீரராக களம் இறக்கப்பட்டார். அந்த ஒரு முடிவுதான் தோனியின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. ஆம் அந்த போட்டியில் தனது அதிரடி காண்பித்த தோனி பாகிஸ்தான் அணியை சின்னாபின்னமாக்கி 148 ரன்கள் எடுத்து ஆட்டம் நாயகன் விருதையும் பெற்றார். அதன் பின்பு நடந்ததெல்லாம் வரலாறாக மாறி போனது.

Dhoni 2

இந்த போட்டியில் பாகிஸ்தானின் அப்ரிடி, மாலிக், சமி, ரசாக் என அனைத்து உலகத் தர பந்து வீச்சாளர்களும் துவைத்து எடுத்த தோனி அவர்களை கதிகலங்க வைத்தார். மேலும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த பாகிஸ்தான் அணி தோனியை விழுத்த மிகவும் சிரமப்பட்டது. இறுதியில் இந்திய அணி 356 ரன்கள் குவிக்க பாகிஸ்தான் அணியை 298 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. மேலும் அந்தப் போட்டி முடிந்து பேசிய கேப்டன் கங்குலி :

தோனி ஒரு ஆக்ரோஷமான வீரர் என்று தெரியும். எனவே அவரது இளமையும் வேகத்தையும் பயன்படுத்த நினைத்தேன். அதனால் தான் டிராவிட்டுக்கு முன்னதாக அவரை இறக்கினேன் அவரும் நான் எதிர்பார்த்தது போலவே சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்தார் என்று கங்குலி கூறியுள்ளார். அப்போது தோனிக்கு வயது வெறும் 23 தான் அதன் பின்னர் தற்போது வரை 16 ஆண்டுகளாக தனது கேரியரில் உச்சத்திற்கு சென்ற தோனி இன்று தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு நம் வாழ்த்துகளை கூறுவோம் நண்பர்களே.!

Advertisement