இனிமே விளம்பரப்படம் வேண்டாம். ஒப்பந்தமும் வேண்டாம் அனைத்தையும் கேன்சல் செய்த தோனி – காரணம் இதுதான்

Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனி இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டிக்குப் பின்னர் இந்திய அணியில் பங்கேற்று விளையாடாமல் இருந்து வருகிறார். கிட்டத்தட்ட அவர் விளையாடி ஒரு ஆண்டுகள் ஆகிய நிலையில் மீண்டும் அவர் அணிக்கு திரும்புவது கடினம் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கூறிவருவதால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

Dhoni

- Advertisement -

ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த வருடம் இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் தன் சொந்த ஊரான ராஞ்சியில் அவரது பண்ணை வீட்டிலேயே தங்கி உள்ளார். அவர் சொந்த நிலத்தில் தற்போது இயற்கை விவசாயம் செய்துவருகிறார்.

தோனி குறித்த புகைபடங்கள் அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனிடையே பல்வேறு செய்திகள் தோனி குறித்து வெளியாகிய நிலையில் தற்போது தோனியின் நண்பரும் மேலாளரும் ஆன திவாகர் டோனி கருத்து தற்போது முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது :

கொரோனா பாதிப்பிலிருந்து நாம் நம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை எந்த ஒரு பிராண்ட் விளம்பரங்களையும் செய்ய வேண்டாம் என்றும் அந்த ஒப்பந்தங்களை தவிர்க்குமாறும் தோனி கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ,மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை எந்த ஒரு விளம்பரப் படத்திலும் நடிக்க மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் பேசிய அவர் நாட்டுப்பற்று தோனியின் ரத்தத்திலேயே உள்ளது. நாட்டுக்காக சேவை செய்வதாக இருக்கட்டும், நிலத்தில் விவசாயம் செய்வதாக இருக்கட்டும் அவர் தீவிரமாக இருக்கிறார். அவரிடம் 40 முதல் 50 ஏக்கர் நிலங்கள் உள்ளன .அதில் இயற்கை விவசாயம் செய்து பப்பாளி வாழை உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறார்.

Dhoni-1

மேலும் எந்தவொரு பிராண்டுகளுக்கும் விளம்பரம் செய்வதை நிறுத்திவிட்டார் மக்கள் இயல்புநிலைக்கு திரும்பும் வரை எந்த ஒரு வருவாய் ஈட்டும் செயல்களிலும் ஈடுபட போவதில்லை என்று தோனி கூறியதாக அவரது மேனேஜர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement