மீதமுள்ள மானத்தை காப்பாத்த சி.எஸ்.கே அணி இதனை செய்தே ஆகா வேண்டும் – வீரர்களுக்கு தோனி விடுத்த கோரிக்கை

Dhoni

ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கைரன் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 114 ரன்கள் குவித்தது.

cskvsmi

சென்னை அணியின் முதல் 4 வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனால் சென்னை அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் சாம் கரன் மட்டும் இறுதி வரை சிறப்பாக விளையாடி 47 பந்துகளில் 52 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். மும்பை அணி சார்பாக டிரென்ட் போல்ட் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதன் பின்னர் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 12.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு நகர்ந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிகாக் 37 பந்துகளில் 46 ரன்களும், இஷான் கிஷன் 37 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 68 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது ஆட்டநாயகனாக டிரென்ட் போல்ட் தேர்வானார்.

ishan kishan

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய தோனி குறிப்பிடுகையில் : இதுபோன்ற தோல்வி வருத்தத்தை நிச்சயம் அளிக்கும். ஆனால் நாம் முகத்தில் சிரிப்பை மட்டுமே காட்ட வேண்டும். ஏனெனில் அணி நிர்வாகம் நாம் பதட்டம் அடைவதை விரும்பாது. இளம் வீரர்களும் அதனைக் கற்றுக் கொண்டு என்ன நடந்தாலும் திடமாக இருக்க வேண்டும். ஓய்வு அறையில் வீரர்கள் சுமுகமான சூழலில் இருந்தால் மட்டுமே அது அணிக்கு நல்லதை தரும்.

- Advertisement -

இந்த தொடரில் இன்னும் மூன்று போட்டிகள் மிஞ்சியிருக்கிறது. நமது அணியின் மதிப்பை காப்பாற்ற இந்த மூன்று போட்டியிலும் வெற்றிபெற வேண்டும். அதன்மூலம் அடுத்த ஆண்டிற்கான தெளிவான ஒரு அணி கிடைக்கும். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது அவர்கள் சிறப்பாக விளையாடி அவர்களது திறமையை நிரூபிக்க வேண்டும்.

அடுத்த மூன்று போட்டிகளிலும் நிறைய மாற்றங்கள் இருக்கும். இது அடுத்த ஆண்டுக்காக நாம் தயாராகும் போட்டியாக கூட இருக்கலாம். இதில் சில பேட்ஸ்மேன்கள், சில பவுலர்களை கண்டறியலாம் என்று தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.