என்னை தக்கவச்சிக்கோங்க. ஆனா அதுல ஒரு கண்டிஷன் இருக்கு – சி.எஸ்.கே நிர்வாகத்திடம் முறையிட்ட தோனி

Dhoni-3 IPL
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14-ஆவது ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ப்ளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது மட்டுமின்றி இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி நான்காவது முறையாக கோப்பையை வென்று அசத்தி இருந்தது. அதனை தொடர்ந்து மகேந்திர சிங் தோனி இன்னும் சில ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் தான் விளையாடுவதை உறுதி செய்தார்.

csk 1

- Advertisement -

இதன் காரணமாக ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் சிஎஸ்கே அணி நிர்வாகமும் முதல் நபராக தாங்கள் தோனியை தான் தக்க வைக்கப்போகிறோம் என்றும் உறுதி அளித்திருந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு 10 அணிகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருப்பதனாலும் இந்த முறை தக்க வைக்கப்பட்டால் அடுத்தது குறைந்தது மூன்று ஆண்டுகளாவது விளையாட வேண்டும் என்கிற காரணத்தினாலும் சென்னை அணியின் கேப்டன் தோனி ஒரு முக்கியமான கண்டிஷன் ஒன்றை சிஎஸ்கே நிர்வாகத்திடம் முன்வைத்துள்ளார்.

அதன்படி சிஎஸ்கே அணியில் நான் கண்டிப்பாக இந்த ஆண்டு விளையாடுகிறேன் ஆனால் என்னை 4-வது வீரராக அணியில் தக்க வைக்க வேண்டும் என்று தோனி கேட்டுக்கொண்டுள்ளார். ஏனெனில் முதல் நபராக அணியால் தக்க வைக்கப்படும் வீரருக்கு அதிக தொகை கொடுக்கப்பட வேண்டும் என்பது ஒரு விதி.

dhoni 1

அதனால் தான் முதல் நபராக வேண்டாம் என்றும் நான்காவது நபராக தக்கவைக்க பட்டால் போதும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஏனெனில் பிசிசிஐ வெளியிட்டுள்ள விதிமுறைப்படி ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் முதல் நபராக தக்கவைக்கும் வீரருக்கு 16 கோடி ரூபாயும், இரண்டாவது நபராக தக்க வைக்கப்படும் வீரருக்கு 12 கோடி ரூபாயும் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : 3-ஆவது நாள் முழுவதும் விக்கெட் கீப்பிங் செய்த கே.எஸ்.பரத் – காரணத்தை சொன்ன பி.சி.சி.ஐ

அதே போன்று மூன்றாவது மற்றும் நான்காவது வீரர்களுக்கு முறையே 8 மற்றும் 6 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்பதனால் தோனி தன்னை நான்காவது நபராக தக்க வைக்குமாறு சிஎஸ்கே அணி நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement