3-ஆவது நாள் முழுவதும் விக்கெட் கீப்பிங் செய்த கே.எஸ்.பரத் – காரணத்தை சொன்ன பி.சி.சி.ஐ

Bharat
Advertisement

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது மூன்றாம் நாளை எட்டியுள்ளது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தற்போது இந்திய அணியானது 2-வது இன்னிங்சில் 14 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி தற்போது 63 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் மீதி உள்ளதால் இரு அணிகளுக்குமே வெற்றிவாய்ப்பு சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் முழுவதும் விக்கெட் கீப்பராக இந்திய அணியின் இளம் வீரர் கே.எஸ்.பரத் செயல்பட்டார்.

bharat 1

விருத்திமான் சஹாவிற்கு பதிலாக இன்றைய நாள் முழுவதும் கே எஸ் பரத் விக்கெட் கீப்பிங் செய்ய என்ன காரணம் என்பது குறித்து பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி 37 வயதான சாஹா இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 12 பந்துகளை சந்தித்து ஒரு ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு அவருக்கு கழுத்தில் ஏற்பட்ட ஸ்டிப்னஸ் காரணமாக அவர் இன்றைய மூன்றாவது நாள் போட்டியில் விளையாட வில்லை கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் அவரது நிலைமையை மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது என்றும் இதன் காரணமாக கே.எஸ்.பரத் சஹாவிற்கு பதிலாக கீப்பிங் செய்துள்ளார் என பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பலமுறை இந்திய அணியில் பேக்அப் விக்கெட் கீப்பராக இடம்பெற்றிருந்த அவர் இம்முறை இந்த தொடருக்கான இந்திய 15 பேர் கொண்ட அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த தொடரில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் தற்போது சஹாவிற்கு பதிலாக விக்கெட் கீப்பிங் செய்தார். அசத்தலான விக்கெட் கீப்பிங் செய்த அவர் இரண்டு சூப்பர் கேட்ச்களை பிடித்தது மட்டுமின்றி ஒரு ஸ்டம்பிங்கையும் செய்து அசத்தி இருந்தார். முதல்தர கிரிக்கெட்டில் 78 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4283 ரன்களை அடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு அதில் 9 சதங்களும், 23 அரை சதங்களையும் அவர் அடித்துள்ளார்.

இதையும் படிங்க : விளையாடியது வெறும் 4 போட்டிகள் தான். அதுலயே மிகப்பெரிய சாதனை படைத்த அக்சர் படேல் – விவரம் இதோ

மேலும் கீப்பிங்கை பொறுத்தவரை 270 கேட்ச்கள் மற்றும் 31 ஒரு ஸ்டம்பிங்கை அவர் செய்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய அவர் டெல்லி அணிக்கு எதிராக 78 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக போட்டியை வென்று கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement