விளையாடியது வெறும் 4 போட்டிகள் தான். அதுலயே மிகப்பெரிய சாதனை படைத்த அக்சர் படேல் – விவரம் இதோ

axar
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் கடந்த 25-ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி ஷ்ரேயாஸ் ஐயரின் அபார சதம் காரணமாக 345 ரன்களை குவித்தது. அதன் பின்னர் தற்போது முதல் இன்னிங்சை விளையாடி முடித்த நியூசிலாந்து அணி லேதம் மற்றும் வில் யங் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் முதல் விக்கெட்டுக்கு 151 ரன்கள் குவித்து.

axar 1

- Advertisement -

அதன் பின்னர் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் 62 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

மற்றொரு வீரராக அஷ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் இந்த போட்டிகளில் விளையாடியுள்ள அக்ஷர் பட்டேல் இந்த இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார்.

axar 2

அந்த சாதனையை யாதெனில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 முறை 5 விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்த நான்காவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான அக்சர் படேல் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : எனது ஆரம்பகால கிரிக்கெட்டில் என்னை ஆதரித்தவர் இவர்தான். அவர் இல்லனா நான் இல்ல – ஷ்ரேயாஸ் ஐயர்

இது அவர் விளையாடும் 4 ஆவது டெஸ்ட் போட்டி 7-வது டெஸ்ட் இன்னிங்ஸ்லேயே தற்போது 5 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். கடைசியாக அவர் விளையாடிய 7 இன்னிங்ஸ் மற்றும் விக்கெட்டுகள் விவரம் இதோ : 2/40, 5/60, 6/38, 5/32, 4/68, 5/48, 5/62

Advertisement