உலகக்கோப்பை ரன் அவுட்டிற்கு பிறகு இன்னும் என் மனதில் இந்த விடயம் உருத்திக்கொண்டே இருக்கிறது – மனம்திறந்த தோனி

Dhoni-2
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வி கண்டது. இந்த தோல்வியை இந்திய ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு வருத்தத்தையும் கொடுத்தது. ஏனெனில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 239 ரன்களைக் குவித்தது.

Jadeja

- Advertisement -

பின்னர் 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் இந்திய அணியை எப்படியாவது வெற்றிபெற வைக்கவேண்டும் என்று டோனி மற்றும் ஜடேஜா ஆகியோர் போராடினார்கள். இவர்கள் இருவரும் 100 ரன்களுக்கு மேல் குவித்து இந்த ஜோடி வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றபோது ஜடேஜா 77 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து அணியின் ஒரே நம்பிக்கையாக தோனி களத்தில் இருந்தார். 49வது ஓவரின் முதல் பந்தை சிக்சருடன் துவக்கிய தோனி எப்படியும் இந்த வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மூன்றாவது பந்தில் குப்திலின் அபாரமான த்ரோவினால் நூலிழையில் தோனி ரன் அவுட் ஆனார். இதனால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

Dhoni

இந்நிலையில் தற்போது அந்த ரன்அவுட் குறித்து இந்தியா டுடே பத்திரிகையிக்கு தோனி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : அப்போது நான் ஏன் டைவ் அடிக்கவில்லை என்று என்னிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அந்த இரண்டடி தூரத்தை டைவ் அடித்து கடந்து இருக்கவேண்டும் என எனக்குள் நான் எப்பொழுது சொல்லிக்கொண்டே இருக்கிறேன் என்று தோனி கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement