MS Dhoni : எங்களின் தொடர் வெற்றிக்கு காரணமாக இவைகளே இருக்கின்றன – தோனி பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 29 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், தினேஷ்

Dhoni
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 29 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணிகளும் மோதின.

karthik

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது சென்னை அணி. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கொல்கத்தா அணியின் துவக்க வீரரான க்றிஸ் லின் 51 பந்துகளில் 82 ரன்களை குவித்தார். இதில் 6 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும்.

அடுத்து 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரெய்னா 42 பந்துகளில் 58 ரன்களும், ஜடேஜா 17 பந்துகளில் 31 ரன்களையும் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்த போட்டியில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய சென்னை அணியின் இம்ரான் தாஹிர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Tahir

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி பேசுகையில் : தற்சமயம் எங்களது அணி கொஞ்சம் வீரர்களின் தேர்வில் சற்று இறுக்கமான நிலை உள்ளது. நிலைமை சரியாகி பலமாக திரும்புவோம் என்று நம்புகிறேன். எங்கள் அணியின் இம்ரான் தாஹிர் அணிக்கு தேவையான நேரத்தில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டிக்கு திருப்புமுனையினை ஏற்படுத்தி தந்தார்.

Raina

க்றிஸ் லின் அபாரமாக ஆடினார். தொடர்ந்து ஆடிய எங்கள் அணியில் நானும் ரெய்னாவும் களத்தில் இருக்கும்போது ரன்கள் எளிதாக வந்தன. பிறகு இறுதி நேரத்தில் ஜடேஜா சிறப்பாக விளையாடி வெற்றியை உறுதி செய்தார். ஒட்டுமொத்தமாக சேசிங் சிறப்பாக அமைந்தது என்று தோனி கூறினார்.

Advertisement