முதல்ல நாங்க நல்லா விளையாடினோம். இப்போ தப்பு பண்ணிட்டோம் – தோல்விக்கு பிறகு தோனி வருத்தம்

Dhoni 2

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 53-வது லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணியானது பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே குவித்தது. சென்னை அணி சார்பாக துவக்க வீரர் டு பிளிசிஸ் 76 ரன்கள் குவித்தார்.

PBKSvsCSK

அதன்பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுலின் அபார ஆட்டம் காரணமாக 13 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 139 ரன்களைக் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் பிளேஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் தக்கவைத்தது.

- Advertisement -

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் கே.எல் ராகுல் 42 பந்துகளில் 98 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில் :

rahul

ஒரு அணியாக பேட்டிங்கில் நாங்கள் இன்னும் முன்னேற வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். நாங்கள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வரை நல்ல கிரிக்கெட் விளையாடினோம். ஆனால் தற்போது அடுத்தடுத்து 3 தோல்விகளை சந்தித்து உள்ளோம். இது போன்ற பெரிய லீக் போட்டிகளில் நிச்சயம் கம்பேக் என்பது மிகவும் முக்கியம்.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ :ரசிகர்கள் மத்தியில் துபாய் மைதானத்தில் தனது காதலிக்கு ப்ரப்போஸ் செய்த தீபக் சாஹர் – வாழ்த்துக்கள்

எங்கள் அணியில் உள்ள வீரர்கள் சற்று இன்னும் திறனை அதிகரித்து விளையாட வேண்டியது அவசியமான ஒன்று. இந்த மைதானம் முதல் பாதியில் பேட்டிங் செய்ய சற்று கடினமாக இருந்தது என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement