வீடியோ :ரசிகர்கள் மத்தியில் துபாய் மைதானத்தில் தனது காதலிக்கு ப்ரப்போஸ் செய்த தீபக் சாஹர் – வாழ்த்துக்கள்

Deepak

துபாய் மைதானத்தில் இன்று மதியம் நடந்த முதல் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணியானது பஞ்சாப் வீரர்களின் அபாரமான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே குவித்தது.

cskvspbks

அதன் பின்னர் விளையாடிய பஞ்சாப் அணியானது கேப்டன் ராகுலின் அதிரடி ஆட்டம் காரணமாக 13 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 139 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இறுதிவரை களத்தில் நின்ற கே.எல் ராகுல் 42 பந்துகளில் 98 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து சென்னை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் துபாய் ஸ்டேடியத்தில் ரசிகர்களின் முன்னிலையில் தனது காதலிக்கு ப்ரப்போஸ் செய்து மோதிரம் ஒன்றையும் அணிவித்தார்.

அவரின் இந்த செயலை சற்றும் எதிர்பாராத அவரது காதலி ஆச்சரியத்தில் மூழ்கினார். இதனை கண்ட மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் ஆரவாரம் செய்தனர். தீபக் சாஹரின் இந்த ப்ரப்போஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

deepak 1

அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே இவர்கள் இருவருக்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement