மும்பை அணிக்கெதிரான இந்த தோல்விக்கு நாங்கள் செய்த இந்த தவறே காரணம் – தோனி கூறியது என்ன தெரியுமா ?

dhoni
- Advertisement -

சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற 27 வது லீக் போட்டி டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய சென்னை அணி 218 ரன்கள் என்ற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியும் மும்பை அணி அதனை தங்களது 20 ஆவது ஓவரில் சேஸிங் செய்து 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியில் சென்னை அணி சார்பாக ராயுடு அமர்க்களமான ஒரு இன்னிங்சை விளையாட மும்பை அணி சார்பாக பொல்லார்ட் அதைவிட ஒரு சூப்பரான இன்னிங்சை விளையாடி மும்பை அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார்.

mi

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய டோனி என்ன விடயங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டார் என்பதை இந்த பதிவில் காணலாம். அதன்படி போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசுகையில் தோனி கூறியதாவது : இந்த மைதானம் சிறப்பாக இருந்தது. ஆனால் இரு அணிகளும் செயல்பட்ட விதம் தான் இதில் வித்தியாசம். பந்துவீச்சாளர்களுக்கு அதிக அளவு இந்த மைதானம் கடினமாக இல்லை.

ஓரளவு பவுலர்களுக்கு ஒத்துழைத்தது. ஆனால் முக்கியமான இடைவெளியில் நாங்கள் தவறவிட்ட சில கேட்ச்கள்தான் இந்த போட்டியை மாற்றியது. பவுலர்கள் இன்னும் சிறப்பாக பந்து வீச இந்த போட்டியின் மூலம் கற்றுக் கொள்வார்கள். இதுபோன்ற மைதானங்களில் எளிதாக அடித்து விளையாட முடியும். அதுவும் ஐபிஎல் போன்ற தொடரில் போட்டிகள் அதிரடியாக சென்று கொண்டிருப்பதால் சில போட்டிகளை ஜெயிக்கலாம் சில போட்டிகளை தோக்கலாம். ஆனால் தோல்வி அடையும் போது உங்களுக்கு ஒரு தூண்டுதல் கிடைக்கும். அதன் மூலம் நிறைய விடயங்களை கற்றுக் கொள்வீர்கள்.

pollard

எது எப்படி இருப்பினும் தற்போது வரை எங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. இதுவரை நாங்கள் சிறப்பாக செயல்பட்டு உள்ளதால் தற்போது வரை நல்ல நிலையிலே இருக்கிறோம் என்று டோனி கூறினார். அதுமட்டுமின்றி பொல்லார்ட் பற்றி கூறுகையில் : தனி ஒருவராக நின்று சிஎஸ்கே அணியை எதிர்த்து பேட்டிங் செய்து அசத்தினார். இது போன்ற சிறிய மைதானங்களில் அதுவும் பேட்டிங்கிற்கு கைகொடுக்கும் பிட்சில் அவருக்கு நிறைய ஹெல்ப் உள்ளது.

polly

அவருடைய பவருக்கு பவுண்டரிகளை மிக எளிதாக விரட்டுகிறார். 17 பந்துகளில் 50 ரன்கள் அடித்ததுமட்டுமின்றி தனி ஒருவராக மும்பை அணிக்கு வெற்றியும் தேடி கொடுத்தார். அவர் போன்ற ஒரு சிறப்பான வீரரின் கேட்சை தவற விட்டால் என்ன நடக்கும் என்பதை அவர் இந்த போட்டியில் காண்பித்து விட்டார் என்று தோனி கூறினார். மேலும் இந்த போட்டியில் சாம் கரண் 17வது ஓவரின் போது சிறப்பாக வீசினார். ஆனால் நிகிடி கடைசி ஓவரில் அதிக புல்டாஸ் வீசியதாகவும் தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement