டெல்லி அணிக்கெதிரான தோல்விக்கு இதுவே காரணம். நாங்க சின்ன தப்பு பண்ணிட்டோம் – தோனி வருத்தம்

Dhoni 2
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 50-ஆவது லீக் போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதலிரு இடங்களை பிடித்து இருந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணியானது துவக்க வீரர்களின் விக்கெட்டை அடுத்தடுத்து இழக்க அதன் பின்னர் வந்த வீரர்கள் அதிரடியாக விளையாட முடியாமல் போனது.

cskvsdc
cskvsdc

இறுதியில் ராயுடு 43 பந்துகளுக்கு 55 ரன்களையும், தோனி 18 ரன்களையும் குவித்தனர். எந்த ஒரு கட்டத்திலும் சென்னை அணியால் அதிரடியாக ஸ்கோர் செய்ய முடியவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை சிஎஸ்கே அணி குவித்தது. பின்னர் 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது துவக்கத்தில் சற்று அதிரடியாக ஆடினாலும் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சற்று சறுக்கியது.

- Advertisement -

இருப்பினும் இறுதியில் பொறுமையாகவே விளையாடிய டெல்லி அணி ஹெட்மயரின் சிறப்பான ஆட்டம் காரணமாக 19.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெற்ற வெற்றி மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.

dc

இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில் : நாங்கள் 150 ரன்கள் அருகில் செல்வோம் என்று நினைத்தோம். ஆரம்பத்திலேயே முதலில் சில விக்கெட்டுகளை இழந்ததால் பொறுமையாக விளையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பின்னர் 15 16 ஓவர்களில் அடித்து ஆட நல்ல அடித்தளம் கிடைத்தது.

- Advertisement -
hetmyer
hetmyer DC

இருந்தாலும் அந்த நேரத்தில் நாங்கள் அதிரடியாக ரன்கள் அடிக்க தவறிவிட்டோம். இந்த மைதானம் பேட்டிங் செய்ய சற்று கடினமாகவே இருந்தது. எனவே 150 ரன்கள் வரை குவித்தால் வெற்றிக்கு போதுமானதாக இருக்கும் என்று நினைத்தோம். இந்த மைதானத்தில் நார்மலான கிரிக்கெட்டை விளையாட முடியவில்லை. அந்த அளவிற்கு ஆடுகளம் இரு தன்மை உடையதாக இருந்தது. டெல்லி அணி பேட்ஸ்மேன்களும் கஷ்டப்பட்டனர்.

இதையும் படிங்க : ரன் அடிக்காம இருக்குறது பிரச்சனை இல்ல. சுரேஷ் ரெய்னா நீக்கத்திற்கான காரணத்தை சொன்ன – கேப்டன் தோனி

உயரமான பவுலர்களுக்கு நல்ல மூமென்ட் கிடைத்தது. இருப்பினும் டெல்லி வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுவிட்டார்கள். முதல் 6 ஓவர்களில் ஒரு ஓவர் பெரிய ஓவராக அமைந்துவிட்டது. இருப்பினும் குவாலிட்டியான பேட்ஸ்மேன்கள் இருக்கும்போது இதுபோன்று நடப்பது சகஜம்தான் என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement