ரன் அடிக்காம இருக்குறது பிரச்சனை இல்ல. சுரேஷ் ரெய்னா நீக்கத்திற்கான காரணத்தை சொன்ன – கேப்டன் தோனி

Raina
Advertisement

ஐபிஎல் தொடரின் 50-ஆவது லீக் போட்டி தற்போது துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி ஆனது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை குவித்துள்ளது.

cskvsdc
cskvsdc

அதிகபட்சமாக ராயுடு 55 ரன்களும், உத்தப்பா 19 ரன்களும், தோனி 18 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் துவக்கத்தில் சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் மிடில் ஆர்டரில் பெரிய அளவு அதிரடி காண்பிக்க முடியவில்லை. அணியின் ஸ்கோர் 28 ரன்களில் இருந்தபோது டூபிளெஸ்ஸிஸ் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து 39 ரன்கள் இருந்த வேளையில் கெய்க்வாட்டும் வெளியேறினர்.

பின்னர் 59 ரன்களில் மொயின் அலியும், 62 ரன்களிலும் ராபின் உத்தப்பாவும் ஆட்டமிழந்து வெளியேற சென்னை அணியால் அதிரடி ஆட்டத்தை கையில் எடுக்க முடியாமல் போனது. இறுதிவரை கஷ்டப்பட்ட சென்னை வீரர்களால் 20 ஓவர்களில் 136 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் சென்னை அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா இடம் பெறாதது குறித்து ரசிகர்கள் பலரும் கேள்விகளை எழுப்பினர். இதற்கு டாஸின் போதே தோனி விளக்கம் அளித்திருந்தார். அந்த வகையில் ரெய்னாவின் நீக்கம் குறித்து பேசிய தோனி கூறுகையில் : ரெய்னாவிற்கு முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள பிடிப்பு காரணமாக அவர் இன்றைய போட்டியில் விளையாட வில்லை என்று கூறினார்.

இதையும் படிங்க : யாரும் எதிர்பாராத மாற்றத்தை செய்த தல தோனி. ரெய்னாவிற்கு பதில் ஆடுவது யார் தெரியுமா ? – சி.எஸ்.கே பேட்டிங்

தொடர்ச்சியான போட்டிகளில் விளையாடும்போது வீரர்கள் இதேபோன்று தசைப்பிடிப்பு மற்றும் சில சச்சரவுக்கு உள்ளாகும் போது அவர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டியது அவசியம் என்றும் தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement