யாரும் எதிர்பாராத மாற்றத்தை செய்த தல தோனி. ரெய்னாவிற்கு பதில் ஆடுவது யார் தெரியுமா ? – சி.எஸ்.கே பேட்டிங்

dhoni 1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 50-வது லீக் போட்டி துபாய் மைதானத்தில் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. கடந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளதால் இந்த போட்டியில் அதே உத்வேகத்துடன் சென்னை அணியை எதிர்கொள்ள உள்ளது.

cskvsdc
cskvsdc

அதேவேளையில் கடந்த போட்டியில் 189 ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவிய சென்னை அணியானது இன்று சில மாற்றங்களை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும் என்பதனால் நிச்சயம் இரு அணிகளும் கடுமையான போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கடந்த போட்டியில் சென்னை அணியின் பந்துவீச்சு மோசமாக இருந்ததன் காரணமாக இன்றைய போட்டியில் பந்துவீச்சு வரிசை மாற்றப்படுமா ? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அணியில் இரண்டு முக்கிய மாற்றங்களை பவுலிங் யூனிட்டில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி செய்துள்ளார். அதன்படி இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.

chahar

அதன் பிறகு அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து இரு அணிகளின் கேப்டன்களும் பேசினர். அந்த வகையில் சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில் : சுரேஷ் ரெய்னாவுக்கு பதிலாக ராபின் உத்தப்பாவும், கே.எம்.ஆசிப்பிற்கு பதிலாக தீபக் சாகரும் இந்த போட்டியில் விளையாடுவதாக அறிவித்தார். மேலும் சாம் கரனுக்கு பதிலாகவும் பிராவோவும் விளையாடுவதாக அறிவித்தார்.

- Advertisement -

uthappa

தோனியின் இந்த முடிவு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏனெனில் பவுலிங்கை வலுப்படுத்த பிராவோ மற்றும் தீபக் சா்கரை அணியில் கொண்டுவந்த தோனி பேட்டிங்கில் சொதப்பிய சுரேஷ் ரெய்னாவிற்கு பதிலாக உத்தப்பாவைக் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது. இன்றைய டெல்லி அணிக்கு எதிரான சென்னை அணியின் பிளேயிங் லெவன் இதோ

இதையும் படிங்க : மைதானத்தில் இருந்த கேமரா லென்ஸை உடைத்த கொல்கத்தா வீரரின் அட்டாக்கிங் ஷாட் – வைரலாகும் வீடியோ

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) டூபிளெஸ்ஸிஸ், 3) மொயின் அலி, 4) ராபின் உத்தப்பா, 5) அம்பதி ராயுடு, 6) தோனி 7) ஜடேஜா, 8) ஷர்துல் தாகூர், 9) பிராவோ, 10) தீபக் சாகர், 11) ஹேசல்வுட்

Advertisement