மைதானத்தில் இருந்த கேமரா லென்ஸை உடைத்த கொல்கத்தா வீரரின் அட்டாக்கிங் ஷாட் – வைரலாகும் வீடியோ

Rana
Advertisement

14-வது ஐபிஎல் தொடரின் நேற்றைய 49-வது லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 115 ரன்கள் மட்டுமே குவித்தது. அதன்பின்னர் தங்களது இன்னிங்சை ஆரம்பித்த கொல்கத்தா அணியானது எளிய இலக்காக இருந்தாலும் அதனை நிதானமாக எடுத்து சென்று கடைசி வரை களத்தில் இருந்து இறுதியில் 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

gill

இந்த போட்டியில் கொல்கத்தா அணி சார்பாக துவக்க வீரர் சுப்மன் கில் 57 ரன்களையும், நித்திஷ் ராணா 25 ரன்களையும், தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 18 ரன்களை குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டியின் போது கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் விளையாடிய கொல்கத்தா அணி ஆரம்பத்தில் வெங்கடேச ஐயர் மற்றும் த்ரிப்பாதி ஆகியோரது விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தது.

- Advertisement -

இதனால் தனது பொறுப்பை உணர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் ராணா 33 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் குவித்தார். இந்த போட்டியின் போது 17வது ஓவரை வீசிய ஜேசன் ஹோல்டரின் பந்தில் பவுண்டரி அடிக்க முயன்றனர். லெக் சைடில் பந்தினை தூக்கி அடித்தார்.

அப்போது அந்தப் பந்து நேராக சென்று பவுண்டரி லைனில் இருந்த கேமரா லென்ஸ்ஸின் மீது பட்டது. பந்து பட்ட வேகத்தில் கேமரா லென்ஸ் நொறுங்கியது. அதனை பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த ரஷீத் கான் பார்த்து கேமராவின் உடைந்த லென்ஸ் முன்பு கைகாட்டி கிண்டலும் செய்தார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement