இவரது பவுன்ஸ் மற்றும் யார்க்கரை கண்டு நான் ஆரம்பகாலத்தில் மிரண்டேன் – தோனி வியப்பு

MSdhoni
- Advertisement -

தோனி இந்திய அணிக்காக 2004-ம் ஆண்டு அறிமுகமானார். அறிமுகமாகி விளையாடிய 33 போட்டிகளில் ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை இவர் பிடித்தார். இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். அப்போது அதிரடியாக ஆடும் பழக்கமுடையவர் தோனி. ஆரம்ப காலங்களில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளை பந்தாடியது நமக்கு ஞாபகம் இருக்கும்.

- Advertisement -

அப்போதைய இலங்கை அணியில் சமிந்தா வாஸ், மகரூப், முத்தையா முரளிதரன் போன்ற பல ஜாம்பவான்களை வீச்சாளர்கள் இருந்தனர். அவர்களை எல்லாம் அடித்து விட்டுதான் டானாக மாறினார் தோனி.. அதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய போது அந்த அணியில் சோயப் அக்தர், அப்துல் ரசாக் உமர் குல் போன்ற திறமை வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருந்தனர்.

பல பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கிய தோனி ஒருசில பந்துவீச்சாளர்களை பார்த்து பேக் அடித்திருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தான் யாருடைய பந்துவீச்சை எதிர்கொள்ள திணறினேன் என்பதைப் பற்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில்…

Akhtar 1

பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது சற்று கடினம் தான். நான் எதிர்கொண்ட வேகப்பந்து வீச்சாளர்களில் கடினமான ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அது கண்டிப்பாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான சோப் அக்தர்தான். ஏனெனில் அவரது பந்துவீச்சு மிகவும் வேகமாக இருக்கும்.

- Advertisement -

Akhtar

மேலும் அவரது யார்க்கர் மிகவும் துல்லியமாக இருக்கும். அதேபோன்று நாம் எதிர்பார்க்காத நேரத்தில் அதிவேக பவுன்சர் வீசுவார். இப்படி சகலவிதமான பந்துவீச்சுக்களும் அவரிடம் இருக்கும். இதனால் அவரது பந்து வீச்சை எதிர்கொள்வது மிகவும் கடினம் என்று தெரிவித்திருந்தார் தோனி. இந்த பேட்டி பழைய பேட்டியாக இருந்தாலும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தோனியின் ஓய்வு குறித்த சர்ச்சை பேச்சு ஒருபுறம் வலம்வந்து கொண்டிருந்தாலும் மறுபுறம் நாள்தோறும் ஒரு செய்தியேனும் வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்து வருகின்றன. மேலும் தற்போதைக்கு ஓய்வு அறிவிக்கப்போவதில்லை என்ற முடிவிலும் தோனி இருப்பதாக தெரிகிறது.

Advertisement