குல்தீப்பின் மாயாஜால பந்தை பிடிக்க தடுமாறிய தோனி..! தலனா சும்மாவா செம்ம கெத்து..! – வைரலாகும் வீடியோ

kuldeep

இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள தோனியின் கீப்பிங் திறன் குறித்து நாம் அனைவரும் அறிந்த ஒரு விடயம் தான். தோனி அவரது மின்னல் வேக ஸ்டம்பிங் திறனிற்கு பெயர் போனவர். இந்நிலையில் நேற்று (ஜூலை 3) இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் தோனி செய்த ஸ்டம்பிங் வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.
KuldeepYadav
இங்கிலாந்து மற்றும் இந்தியா விளையாடிய முதல் டி20 போட்டி நேற்று மாஞ்சிஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராட்போர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது.

இதில் தோனி ஜோ ரூட் மற்றும் ஜோன்னி பிரிஸ்டோவ் ஆகியோரை ரன் எதுவும் எடுக்கவிடாமல் ஸ்டம்பிங் செய்து அசத்தினார்.இங்கிலாந்து அணி விளையாடிகொண்டிருக்கும் போது 14 வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். ரூட்டிற்கு குல்தீப் வீசிய பந்தை பிடிக்க தோனி தடுமாறினார், தோனியின் கையில் பிடிபடாமல் க்ளௌஸ் மற்றும் ஹெல்மெட்டில் பட்டது.


எனினும் சுதாரித்துக்கொண்ட தோனி, கவனமாக பந்தை பிடித்து, ஸ்டம்பிங் செய்து ரூட்டை ரன் எதுவும் எடுக்கவிடாமல் ஆட்டமிழக்க வைத்தார். இதோ அந்த வீடியோ.