பொறுப்பை உணர்ந்து விளையாடிய பிராவோ…தோணி பாராட்டு மழை

MS Dhoni
- Advertisement -

11வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மோதின.இரண்டாண்டு தடைக்கு பின்னர் களமிறங்கிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில் 4விக்கெட்டுகள் இழப்பிற்கு 165ரன்களை சேர்த்தது.சென்னை சூப்பர்கிங்ஸ் அணி சார்பில் ஷேன்வாட்சன் 2 விக்கெட்டுகளையும், சாஹர் மற்றும் இம்ரான் தாஹிர் தலா 1விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

- Advertisement -

166 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் இரண்டாடுகளுக்கு பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்கள் ஆரம்பம் முதலே பேட்டிங்கில் சொதப்பினர்.ஒரு புறம் சென்னை அணியின் விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்தபடி இருந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பிராவோ மற்றொருபுறம் மும்பை இந்தியன் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

சென்னை அணி இந்த போட்டியில் வெற்றி பெரும் வாய்ப்பே இனி இல்லையென ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியபோது தனது சிக்ஸர் மழையால் சென்னை அணிக்கான வெற்றிக்கதவை திறந்து வைத்தார் பிராவோ.30 பந்துகளில் 3பவுண்டரிகள் மற்றும் 7சிக்ஸருடன் 68 ரன்களை குவித்து சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெற்றிபெற பெரிதும் உதவினார்.

- Advertisement -

வெற்றிக்கு பின்னர் பேசிய தோனி “இரண்டாண்டுகளுக்கு பின்னர் சென்னை அணி விளையாடிடும் போட்டியை அனைவரும் பார்க்க விரும்பியிருந்தனர். இந்த போட்டியில் பிராவோ சிறப்பாக பேட்டிங் செய்தார், நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்திருக்கலாம். ஆனால் சொதப்பிவிட்டோம். முதல் போட்டியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி” என்றார்.

பின்னர் பேசிய பிராவோ “இது சிறப்பான வெற்றி. இந்த வெற்றியை நான் சென்னை சூப்பர்கிங்ஸ் ரசிகர்களுக்கு சமர்பிக்கின்றேன். என் மீது அணி வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கின்றேன். கிடைத்த வாய்ப்பை பயன் படுத்திக்கொண்டு சிறப்பாக பேட்டிங் செய்ததில் மகிழ்ச்சி” என்றார்.

Advertisement