இன்று நம் இந்தியாவிற்கு மிகச்சிறந்த வீரர் கிடைத்துள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணம் ஜெயந்தி குப்தா தான்.இங்கே தோனியை தெரிந்த பலருக்கும் ஜெயந்தி குப்தா யாரென்றே தெரியாது.ஜெயந்தி குப்தா வேறு யாருமில்லை நம் மஹேந்திரசிங் தோனியின் சகோதரி.
பள்ளிக்காலங்களில் தோனி கிரிக்கெட் கிரிக்கெட் என்று சுற்றிக்கொண்டிருந்த காலத்தில் தோனியின் தந்தையான பான் சிங், டேய் ஒழுங்கா படிக்குற வேலையப்பாரு கிரிக்கெட் எல்லாம் சரிபட்டு வராது என்று திட்டிய காலங்களில் தோனிக்கு உறுதுணையாக இருந்தவர் தான் தோனியின் அக்கா ஜெயந்தி குப்தா.
தனது அக்காவின் உறுதுணையால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிய தோனி சர்வதேச போட்டிகளில் இலங்கைக்கு எதிரான தொடரில் அறிமுகமாகி முதன் முதலில் விளையாடி பின்னர் படிப்படியாக தனது திறமையால் வளர்ந்து வந்தவர்.
தனது நீண்டகால தோழியான சாக்ஷியை காதலித்து திருமணம் செய்துகொண்ட தோனிக்கு தற்போது ஜிவா தோனி என்கிற மகளும் உள்ளனர்.