அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக விளையாடுவேனா ? – டாஸிற்கு பிறகு தோனி கூறியது என்ன ?

dhoni 1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 53-வது லீக் போட்டி தற்போது துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்து வீசுவதாக தேர்வு செய்தார். அதன்படி தற்போது சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

cskvspbks

- Advertisement -

இந்த போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக நிக்கலஸ் பூரன் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக க்றிஸ் ஜோர்டன் அணியில் இடம் பெற்று இருக்கிறார். ஆனால் சென்னை அணியை பொறுத்தவரை எந்தவித மாறுதலும் இன்றி அதே பிளேயிங் லெவனுடன் விளையாடுகிறது. இந்நிலையில் டாசிற்கு பிறகு சில விடயங்களை பகிர்ந்து கொண்ட தோனி இந்த போட்டி குறித்து கூறுகையில் : 5 நாட்களில் நாங்கள் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளோம்.

இதன் காரணமாக வீரர்களது உடல்நிலையை மெயின்டெய்ன் செய்வது சற்று சிரமம் தான். இந்த ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் எங்களுக்கு அடுத்தடுத்து போட்டிகள் வந்துகொண்டே இருக்கின்றன. இருந்தாலும் அதற்கேற்றவாறு நாங்கள் தயாராகி விளையாடி வருகிறோம். துபாய் மைதானத்தில் வெப்பம் ஒரு தாக்கமாக இருக்கும் என்று கூறினார்.

csk

மேலும் தொடர்ந்து பேசிய தோனி : அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடுவாரா என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் : நிச்சயம் அடுத்த ஆண்டு நீங்கள் என்னை மஞ்சள் நிற உடையில் பார்க்கலாம். ஆனால் நான் விளையாடுவேனா என்பது தெரியாது என்று ஒரு புதிரான பதில் அளித்திருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : பெங்களூரு அணிக்கெதிரான வெற்றிக்கு இந்த ஒரு விடயமே காரணம் – கேன் வில்லியம்சன் ஹேப்பி

மேலும் அடுத்தாண்டு இன்னும் இரண்டு அணிகள் வருவதால் எத்தனை வீரர்களை அணியில் தக்கவைப்பது என்பது இதுவரை தெரியாது. எத்தனை வெளிநாட்டு வீரர்கள் ? எத்தனை இந்திய வீரர்களை ?நம்மால் அணியில் தக்கவைக்க முடியும் என்பது தெரியாது. இருப்பினும் அனைவருக்கும் நல்ல படியாக அந்த மாற்றம் அமையும் என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement