எனக்கு இவர் சகோதரர் போன்றவர். பெங்களூரு அணிக்கெதிரான போட்டிக்கு பிறகு – தோனி வெளிப்படை

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 35வது லீக் ஆட்டம் நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி சிறப்பான துவக்கத்தை பெற்றிருந்தாலும் மிடில் ஆர்டரில் எந்தவித ஒரு வீரரும் அதிரடியாக விளையாட காரணத்தினால் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் குவித்தது. சென்னை அணி சார்பாக பிராவோ மற்றும் தாக்கூர் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி முறையே 3 மற்றும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள்.

rcbvscsk

- Advertisement -

அதன்பிறகு 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி பேட்ஸ்மேன்களின் சிறப்பான பங்களிப்பு காரணமாக 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்களூர் அணி நல்ல துவக்கத்தை பெற்று இருந்தாலும் அதனை தக்க வைக்க முடியாமல் ரன் எடுக்க தடுமாறியது.

அதேவேளையில் சென்னை அணியின் பந்து வீச்சில் முதல் பாதியில் கோட்டைவிட்டு இருந்தாலும் இரண்டாவது பாதியில் சிறப்பாக பெங்களூர் அணியை கட்டுப்படுத்தியது. அதுமட்டுமின்றி பேட்டிங்கிலும் அனைவரும் சரியாக பங்களிப்பை வழங்க எளிதாக பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

bravo

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய தோனி பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் சிஎஸ்கே அணியில் இருக்கும் வீரர் ஒருவர் தனது சகோதரர் போன்றவர் என்றும் குறிப்பிட்டார். இதுகுறித்து பேசிய அவர் : பிராவோ இந்த போட்டியில் அற்புதமாக பந்து வீசினார். அவர் எனக்கு எப்போதும் சகோதரர் போன்றவர் தான். பிராவோ மற்றும் எனக்கு இடையே உள்ள நட்பு மிகவும் சிறப்பான ஒன்று.

bravo

அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை என்னால் நிச்சயம் கணிக்க முடியும். இந்த போட்டியில் அவர் அனைத்து பந்துகளையுமே வேகம் குறைத்து தான் வீச போகிறார் என்று பேட்ஸ்மேன்கள் கணித்து விடுவார்கள் என்பதால் ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு விதமாக வீச வேண்டும் என்றும் கூறியிருந்தேன். அதேபோல் அவர் செயல்பட்டார் தோனியின் இந்த பேட்டியின் மூலம் பிராவோ மீது அவர் வைத்திருக்கும் அன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

Advertisement