மைதானத்தில் நான் டயர்டு ஆகி கஷ்டப்பட இதுவே காரணம் – வெளிப்படையாக உண்மையை கூறிய தல தோனி

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 14 வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 164 ரன்களைக் குவித்தது.

srhvscsk

அதிகபட்சமாக அந்த அணியின் இளம் வீரரான பிரியம் கார்க் 26 பந்துகளில் 51 ரன்களையும் அபிஷேக் வர்மா 24 பந்துகளில் 31 ரன்கள் அடித்து அசத்தினார். பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஜடேஜா 50 ரன்களையும், தோனி 47 ரன்களையும் அடித்தனர்.

- Advertisement -

இதன் காரணமாக சென்னை அணி 7 ரன் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. பிரியம் கார்க் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் அடைந்த தோல்வி சென்னை அணிக்கு தொடர்ச்சியான 3 ஆவது தோல்வியாகும். இந்த தோல்வி மீண்டும் சென்னை ரசிகர்களுக்கு பெரிய வருத்தத்தை அளித்துள்ளது.

இந்நிலையில் போட்டியின் தோல்விக்குப் பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறியதாவது : என்னால் பல பந்துகளை சரியாக மிடில் பேட்டில் அடிக்க முடியவில்லை. பந்தை பலமாகவே அடிக்க நான் முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் மைதானம் ஸ்லோவாக இருந்ததால் எனக்கு சரியாக பந்து கனெக்ட் ஆகவில்லை. மேலும் இந்த போட்டியில் நான் மிகவும் டயர்டாக உணர்ந்தேன்.

- Advertisement -

ஏனெனில் மைதானத்தில் இருந்த வெப்பம் மற்றும் காற்று இல்லாமல் மிகவும் ட்ரையாக இருந்தது. அதனால் எனது தொண்டை மிகவும் வறண்டு இருமலும் வர ஆரம்பித்தது. இதனால் தான் டயர்டு ஆனேன். அதற்காக சில நேரத்தை எடுத்துக் கொண்டதாகவும் தோனி தெரிவித்துள்ளார். தோனி மைதானத்தில் மூச்சுவிட கஷ்டப்பட்டதை கண்ட ரசிகர்களுக்கு பெரும் வருத்தம் ஏற்பட்டது.

dhoni 1

அது மட்டுமின்றி உடனடியாக உதவி நிர்வாகிகளும் மைதானத்திற்கு ஓடிவந்து தோனிக்கு பெயின் கில்லர் மாத்திரைகளை கொடுத்தனர். அதன் பின்னரும் தோனி கடைசி ஓவரில் பலமாக அடிக்க முயன்றும் அவரால் அது முடியாமல் போனது. வழக்கமாக ஓடும் வேகத்தை விட தோனி நேற்றைய போட்டியில் கஷ்டப்பட்டு ஓடினார் என்பதை நாம் நேற்றைய போட்டியை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

Advertisement