இந்த தொடரில் நான் பல இளம்வீரர்களுக்கு எனது ஜெர்சியை வழங்க இதுவே காரணம் – ரகசியத்தை உடைத்த தோனி

Dhoni

ஐபிஎல் தொடரின் 53 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

Dhoni

அதன்படி முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக இளம் வீரர் தீபக் ஹூடா 30 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள் என 62 ரன்களையும், கேஎல் ராகுல் 29 ரன்களும் குவித்தனர். சென்னை அணி சார்பாக லுங்கி நெகிடி சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 39 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 154 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக துவக்க வீரர் கெய்க்வாட் 49 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சர் என 62 ரன்களையும், டு பிளிசிஸ் 34 பந்துகளில் 48 ரன்களையும், அம்பத்தி ராயுடு 30 பந்துகளில் 30 ரன்களும் குவித்தனர். ஆட்டநாயகனாக ருத்ராஜ் கெய்க்வாட் தேர்வானார்.

இந்தத் தொடரில் தோனி பல வீரர்களுக்கு தனது மஞ்சள் ஜெர்சியை பரிசாக வழங்கினார். குறிப்பாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது ஜாஸ் பலருக்கு அவர் தனது ஜெர்சியை வழங்கினார். தோனியின் தீவிர ரசிகரான ஜாஸ் பட்லர் அவரிடம் இருந்து அந்த ஜெர்சியை பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியை இணையத்திலும் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து மும்பை அணியின் பாண்டியா சகோதரர்கள் பெற்றுக்கொண்டனர்.

- Advertisement -

அதுமட்டுமின்றி கொல்கத்தா அணியின் வீரரான நிதிஷ் ராணா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு தனது ஜெர்சி வழங்கினார். மேலும் இளம் வீரர்கள் பலரும் அவர் களத்தில் நீண்ட நேரம் உரையாடிய காட்சிகளையும் நாம் இந்த தொடரில் கண்டோம். இந்நிலையில் தான் ஏன் அவ்வாறு மஞ்சள் நிற ஜெர்சியை பல வீரர்களுக்கு வழங்கிய காரணம் என்ன என்பது குறித்தும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

dhoni jersy

இந்தத் தொடரில் நான் விளையாடும் போது அவர்கள் என்னிடம் வந்து வேண்டுகோளாக ஜெர்சியை பெற்றுக் கொண்டார்கள். ஏனெனில் அவர்கள் நான் இந்த ஆண்டு ஓய்வு பெறுவேன் என்று நினைத்திருக்கலாம். அதனால் நினைவு பரிசாக அந்த ஜெர்சியை பகிர்ந்து கொண்டனர். ஆனால் நான் இந்த தொடரில் ஓய்வு பெறப் போவதில்லை என்று தெளிவான விளக்கத்தை தோனி பதிவு செய்திருந்தார்.