உயிருக்கு ஆபத்தான இடத்தில் பாராசூட் ரெஜிமென்ட் பயிற்சியை எடுக்க இருக்கும் – தல தோனி

Dhoni
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய தோனி இந்த இரண்டு மாத ஓய்வினை பேராஷூட் ரெஜிமன்ட் பிரிவில் பயிற்சி பெற முடிவு செய்திருந்தார். அதன்படி இந்திய ராணுவத்தின் பேராஷூட் ரெஜிமென்டில் பயிற்சி பெற தோனி அனுமதி கேட்டு இருந்தார்.

- Advertisement -

தற்போது தோனிக்கு ராணுவத்தளபதி பிபின் ராவத் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்திய ராணுவத்தில் கௌரவ லெஃப்டினன்ட் கர்னலாக இருக்கிறார்.

அவ்வப்போது ராணுவ வீரர்களுடன் உரையாடும் தோனி ஏற்கனவே பேராஷூட் பிரிவில் சிறு பயிற்சியினை மேற்கொண்டுள்ளார். அதனை அடுத்து தற்போது ராணுவ குழுவுடன் முழுநேர பயிற்சி மேற்கொள்ள அனுமதி கேட்டிருந்தார். இதனையடுத்து தோனியை இந்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற ராணுவத் தளபதி பிபின் ராவத் தோனிக்கு அனுமதி வழங்கி உள்ளார்.

Dhoni 2

அதன்படி இந்தியாவின் ஆபத்தான இடமான காஷ்மீர் பகுதியில் பாராசூட் ரெஜிமென்டில் வீரர்களுடன் இணைந்து தோனி பயிற்சி பெற உள்ளதாகவும், ராணுவ நடவடிக்கைகளில் பங்கு பெற அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், மிகவும் ஆபத்தான இந்த இடத்தில் தோனி பயிற்சியை மட்டும் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பகுதியில்தான் புல்வாமா தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement