இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி உலகக்கோப்பைக்கு பின்பு ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இன்று வரை ஓய்வு பெற்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி ராணுவ பயிற்சியில் ஈடுபட்டார். தோனிக்கு தற்போது நடைபெறும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர வாய்ப்பு கிடைக்கவில்லை.
MS Dhoni’s adorable moment with Ziva will melt your heart ????#Daughtersday #Dhoni #Ziva pic.twitter.com/qWmqaJerCl
— MS Dhoni Fans Official (@msdfansofficial) September 22, 2019
இதனால் தற்போது ஓய்வில் இருக்கும் தோனி தனது மகளுடன் வீட்டில் பலூன்களை வைத்து விளையாடிய ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அடுத்து வரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் தோனி ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் ராஞ்சியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சியை செய்து வருகிறார்.
தோனி அடுத்த வருட டி20 உலகக் கோப்பை பின் ஓய்வு அறிவிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் தோனி ஓய்வு குறித்து என்ன முடிவு செய்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாத புதிராக இருக்கிறது. இருப்பினும் அவ்வப்போது தோனி குறித்த செய்திகள் இணையத்தில் தொடர்ந்து வெளிவரும் நிலையில் தனது மகளுடன் விளையாடும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.