சுரேஷ் ரெய்னாவை பின்னுக்கு தள்ளி வரலாறு படைத்த தல தோனி – விவரம் இதோ

Raina
- Advertisement -

புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடத்தில் இருக்கும் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கான போட்டி இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது. சென்னை அணி மூன்று போட்டிகள் விளையாடி இரண்டு போட்டியில் தோல்வியடைந்து, ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. ஹைதராபாத் அணிக்கும் இதே நிலைமை தான்.

cskvssrh

இந்த இரண்டு அணிகளும் இன்று மோதப் போகிறது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை 12 முறை ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்கின்றனர். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஆதிக்கத்தை செலுத்தி இருக்கிறது.மொத்தம் ஒன்பது முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றிருக்கிறது. ஹைதராபாத் அணி 3 முறை மட்டுமே வெற்றியை தன் வசப்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது துபாய் மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி துவங்க உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.

Vijay

இந்த டாசுக்கு அடுத்து இந்தப் போட்டியில் சென்னை அணியில் யார் யார் விளையாடுகிறார்கள் என்பது குறித்து அணியின் கேப்டன் டோனி விளக்கினார். அதில் தொடர்ந்து சொதப்பி வரும் முரளி விஜய் மற்றும் கெய்க்வாட் ஆகியோரை அணியில் இருந்து வெளியேற்றி அவர்களுக்கு பதிலாக ராயுடு மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரை கொண்டு வந்துள்ளார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி ஹேசல்வுட்க்கு பதிலாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ சென்னை அணியில் விளையாடுகிறார். ராயுடுவும், பிராவோவும் அணியில் இணைந்து இருப்பது சிஎஸ்கே அணிக்கு பலத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புமா ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

raina

இந்நிலையில் தோனி இந்த போட்டியின் விளையாடுவதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். அதாவது இதுவரை ஐபிஎல் தொடர்களில் 193 போட்டிகளில் விளையாடி சுரேஷ் ரெய்னா அதிக போட்டிகளில் விளையாடிய ஐபிஎல் வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்தார். அதனை இப்போட்டியில் விளையாடுவதன் மூலம் தோனி முறியடித்துள்ளார். இன்று தோனி தனது 194 ஆவது ஐ.பி.எல் போட்டியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement