11 வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் இன்று(மே27) நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சனின் ஹைதராபாத் அணியும் பல பரிட்சை செய்யபோகும் இந்த போட்டியில் வெற்றிபெற போவது யார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற தோனியிடம், இறுதி போட்டியில் வெற்றிபெறுவதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த தோனி “என்னிடம் திட்டம் எல்லாம் ஒன்றும் இல்லை, எங்கள் அணியின் பயிற்சியாளராக இருக்கும் பிளம்மிங் தான் திட்டம் தீட்டுவார் நான் அதை செயல்படுத்திக்கிறேன். ” என்று கூறியுள்ளார்.
இதுபற்றி மேலும் பேசிய தோனி”கடந்த ஹைட்ராபாத்திற்கு எதிரான போட்டியில் ஏன் ஹர்பஜன் சிங்கை பந்து வீச செய்யவில்லை என்று என்னிடம் கேவிகேட்கின்றனர். என்னுடைய வீட்டில் நிறைய கார்கள் உள்ளது அனைத்தையும் நான் ஒரேய நேரத்தில் ஓட்ட முடியுமா, அதே போல தான் போட்டியின் தன்மையை பொருத்தும், எதிராணியால் யார் பேட்டிங் செய்கிறார்கள் என்பதை பொறுத்தே யார் பந்து வீச வேண்டும் என்று என்று முடிவெடுக்க முடியும்.” என்று கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் சிறந்த வீரர்கள் உருவாகி வருகின்றனர். அதே போல தான் இந்த ஐபிஎல் தொடரிலும் பல இளம் வீரர்கள் உருவாகியுள்ளனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஷிவம் மாவி போன்ற இளம் பந்து வீச்சாளர்கள் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டனர் என்றும் தோனி கூறியுள்ளார்.