ப்ளீஸ் என்னை விட்ருங்க. ஜனவரி வரைக்கும் ஏதும் கேட்காதீங்க. நானே சொல்றேன் – விவரம் இதோ

Dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி இங்கிலாந்தில் நடந்து முடிந்த 50 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பின் கிரிக்கெட் போட்டிகளில் இன்னும் பங்கேற்கவில்லை. அவர் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் தற்போது நடந்து முடிந்த பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவில்லை.

Dhoni

மேலும் தோனியை கடந்த சில தொடர்களாக இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் நிராகரித்து வருகிறது. இந்நிலையில் தோனி மீண்டும் இப்போது கிரிக்கெட்டில் களமிறங்குவார் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. மேலும் வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதால் அவரின் ஓய்வு அறிவிப்பை வெளியிட கட்டாயப்படுத்துகிறார்களோ என்ற எண்ணமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் முதல்முறையாக தனது வருங்கால திட்டம் குறித்து தோனி நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பதில் அளித்துள்ளார். அதில் உங்களது வருங்கால திட்டம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தோனி : ஜனவரி மாதம் வரை என்னிடம் இந்த கேள்வியை கேட்காதீர்கள் என தெரிவித்துள்ளார். ஜனவரிக்கு பின் திட்டத்தை நான் முறையாக அறிவிப்பேன் என்று கூறினார்.

Dhoni-1

இதற்கு முன்னதாக நேற்று தோனியின் வருங்காலம் குறித்த கேள்விக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியதாவது : தோனியின் எதிர்காலம் குறித்து தெரிந்துகொள்ள ஐபிஎல் தொடர் வரை பொறுத்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தோனி தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார். மேலும் எப்போது ஓய்வு பெறப் போகிறார்கள் என்ற விவாதங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இருப்பினும் தோனி தொடர்ச்சியாக மௌனம் சாதித்து வந்தார்.

- Advertisement -

Ms Dhoni Bhuvneshwar-Kumar

இந்நிலையில் நேற்று அவர் கொடுத்த விளக்கம் மூலம் தற்போது அந்த கேள்விக்கான பதிலை சிறிது தூரம் முடித்து வைத்துள்ளார். இதனால் ஜனவரிக்கு பின்பு தோனி என்ன செய்வார் என்றும் அனைவரும் யோசிக்கத் தொடங்கி உள்ளனர். ஜனவரி மாதம் இந்திய அணிக்கு முக்கியமான தொடர்கள் நடைபெறவிருக்கின்றன. ஜனவரி மாதம் பாதியில் ஆஸ்திரேலிய அணியுடனான தொடர் அதன்பிறகு நியூசிலாந்து தொடர் என பெரிய தொடரில் இந்திய அணி மோதுகிறது. எனவே இந்தத் தொடர்களை கவனத்தில் வைத்து ஜனவரி என்பதை குறிப்பிட்டு சொல்கிறார் என்ற எண்ணமும் தோன்றத்தான் செய்கிறது.