எனக்கு மட்டுமல்ல கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் இந்த பயம் இருக்கும் ஆனால் யாரும் வெளியில் சொல்வது கிடையாது – தோனி பேட்டி

Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த எஸ் பத்ரிநாத் தனது நண்பருடன் இணைந்து விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தை சமாளித்து கிரிக்கெட்டில் சாதிக்க உதவுவதற்கான “எம்போர்” என்ற அமைப்பை உருவாக்கி உள்ளார். இந்த அமைப்பு இளம் கிரிக்கெட் வீரர்களின் ஆட்ட திறனை ஊக்குவித்து அவர்களுக்கு உத்வேகத்தை அளிப்பதற்காக துவக்கப்பட்டுள்ளது.

Badrinath

- Advertisement -

இந்த அமைப்பின் உதவி மூலம் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் ஏற்படும் சிக்கல்களை நீக்கி தன்னம்பிக்கையோடு விளையாட வைப்பதற்கான நடைமுறையை அவர்களுக்கு இதன்மூலம பயிற்றுவிக்கப்படும். இந்த அமைப்பு சார்பில் பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த பயிற்சியாளர் உடன் காணொளி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான தோனி காணொளியில் கலந்துகொண்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருக்கும் தோனி இந்த காணொளி காட்சி மூலம் அனைவரிடமும் கலந்துரையாடினார். அந்தக் கலந்துரையாடலில் தோனி கூறியதாவது : இந்தியாவைப் பொருத்தமட்டில் மனநலம் சார்ந்த சில பலவீனங்கள் ஏற்பட்டால் அதனை ஏற்றுக் கொள்வது இன்னும் மிகப் பெரிய பிரச்சினையாகி விடும் என்பதாக நான் நினைக்கிறேன்.

Badrinath

ஆனால் பொதுவாக நாம் அதனை மனநோய் என்று குறிப்பிடுகிறோம். பேட்டியின்போது முதல் ஐந்து முதல் பத்து பந்துகளை சந்திக்கும்போது எனது இதயத்துடிப்பு எகிறும் அப்போது எனக்கு நெருக்கடியும் லேசான பயமும் ஏற்படும். எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் இதேபோலதான் இருக்கச் செய்யும் ஆனால் இந்த உண்மையை யாரும் வெளியே செல்வதில்லை.

- Advertisement -

அதனை எப்படி சமாளிப்பது என்று எல்லோரும் யோசிப்பது உண்டு. அது ஒரு சிறிய பிரச்சனை தான் ஆனால் பல சமயங்களில் இதனை பயிற்சியாளரிடம் சொல்ல நான் தயக்கம் காட்டுவோம் இதனால்தான் எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் பயிற்சி அவருக்கும் இடையிலான உறவு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

dhoni

மனநல ஆலோசகர் என்பவர் 10 முதல் 15 நாட்கள் மட்டும் அணியுடன் இருப்பவராக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அவரால் அனுபவத்தை மட்டுமே பகிர முடியுமே. தவிர வீரர்களுக்கு சரியான ஆலோசனையை கொடுக்க முடியாது. மனநல ஆலோசகர் என்பது எப்போதும் அணியுடன் நிலைத்து இருக்க வேண்டும் அது அவசியமான ஒன்று. அப்போதுதான் எந்தெந்த விஷயங்களில் வீரர்களில் ஆட்டத்திறன் பாதிக்கப்படுகிறது என்பதை கண்டறிந்து அவர்கள் அதற்கு தகுந்தபடி ஆலோசனைகளை வழங்க முடியும் என்று கூறினார்.

உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் விளையாடாமல் இருக்கும் தோனி ஐபிஎல் தொடரின் மூலம் தனது ஆட்டத்திறனை நிரூபித்து மீண்டும் டி20 அணியின் இணைய இருந்தார். ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் தள்ளிப்போய் உள்ளதால் அவர் அணிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை அணிக்கு அவர் தேர்வாகவில்லை என்றால் மீண்டும் அவர் அணியில் இணைய வாய்ப்பு என்பதே கிடையாது என்று பலரும் கூறிவருகின்றனர்.

Advertisement