RCB vs CSK : தோனி செய்த பெரிய தவறை சுட்டிக்காட்டும் கிரிக்கெட் நிபுணர்கள் – விவரம் இதோ

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தோனி

Dhoni
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதின.

VK and MS

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார் தோனி. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 53 ரன்களும், மொயின் அலி 26 ரன்களையும் அடித்தனர். இதனால் சென்னை அணிக்கு 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி தொடர்ந்து ஆடிய சென்னை அணி 20 முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை அடித்து 1 ரன் வித்தியாசத்தில் அதிர்ஷ்டவசமின்றி தோற்றது. தோனி 48 பந்துகளில் 84 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்கால் இருந்தார். இறுதி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5 பந்துகளில் தோனி 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 24 ரன்களை சேர்த்தார். கடைசி பந்தை அடிக்க முடியாமல் விட மறுமுனையில் இருந்து பைஸ் ஓடிய தாக்கூர் ரன் அவுட் ஆனார். இதனால் பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் கடைசி 3 ஓவர்களில் 49 ரன்கள் தேவைப்பட்டது. அப்போதும் சென்னை அணியின் கேப்டன் தோனி காலத்தில் நிற்பதால் சென்னை அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. அதுக்கு ஏற்றாற்போல் 18 ஓவரில் 13 ரன்கள் வந்தது. மீதி 2 ஓவருக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது அப்போது தோனி 19 ஆவது ஓவரில் 3 பந்துகளை டாட் பால் ஆக்கினார். அந்த மூன்று பந்துகளும் சிங்கிள் எடுக்கவேண்டிய பந்துகளே ஆனால், தோனி சிங்கிள் எடுக்க தவறினார் மறுபுறம் பிராவோ இருந்தும் அவர் ரன் ஓடாதது தற்போது சர்ச்சையாகி உள்ளது.

- Advertisement -

Dhoni 1

பிராவோவும் நல்ல ஹிட்டர் தான் அவரிடம் ஒரு சிங்கிள் ஓடி இருந்தால் அவரும் சிக்ஸ் அடிக்க முயற்சித்து இருப்பார். ஆனால், தோனி அவருக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் அவரே அடிக்கவேண்டும் என்று நினைத்தது எந்த எண்ணத்தில் சரியானது என்று புரியவில்லை. அந்த ஓவரின் 5 ஆவது பந்தை தோனி ஒரு ரன் எடுக்க கடைசி பந்தில் பிராவோ ஆட்டமிழந்து வெளியேறினார். இது போட்டிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தோனியின் இந்த எண்ணம் தற்போது கிரிக்கெட் நிபுணர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதுஒருபுறம் இருக்க தோனியின் ரசிகர்கள் அவரது இந்த சிறப்பான ஆட்டத்தை பாராட்டி வருகின்றனர்.

Dhoni

மேலும், கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட அந்த ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். தனது அனுபவத்தை பலமாக கொண்ட தோனி அந்த ஓவரின் 5 பந்துகளில் 4,6,6,2,6 என மொத்தம் 24 ரன்களை குவித்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி பந்தை தோனி அடிக்காமல் விட பந்து கீப்பரின் வசம் சென்றது. உடனே பார்த்திவ் பட்டேல் பந்தை பிடித்து த்ரோ செய்து தாக்கூரை ரன் அவுட் ஆக்க பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement