MS Dhoni : பலமாக அடிக்க முயன்று பேட்டை அந்தரத்தில் எறிந்த தோனி – வீடியோ

ஐ.பி.எல் தொடரின் பிளேஆப் குவாலிபயர் 1 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும்

Dhoni
- Advertisement -

நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி துவக்கத்தில் இருந்து விக்கெட்டுகளை இழந்ததால் ரன் எடுக்க தடுமாறியது. தோனி 29 பந்துகளில் 37 ரன்கள் அடித்து சற்று ஆறுதல் தந்தார். தோனி 20 ஆவது ஓவரின் முதல் பந்தை அடிக்க முயன்று பேட்டை கையில் இருந்து நழுவவிட்டார். பந்து பேட்டில் பட்டு கேட்ச் ஆனது. ஆனால், எப்போதும்போல விக்கெட் எடுக்கும் பந்தில் நோபால் பும்ரா இந்த முறையும் நோபால் வீசினார். அதனால் அதிர்ஷ்டவசமாக அவுட்டில் இருந்து தோனி தப்பித்தார். இருப்பினும் சென்னை கடைசில் தோற்றது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் பிளேஆப் குவாலிபயர் 1 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரோஹித் தலைமையிலான மும்பை அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை 131 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ராயுடு 42 ரன்களும், தோனி 37 ரன்களை குவித்தனர். சாகர் 4 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பிறகு 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 71 ரன்களை குவித்தார். மேலும் ஆட்டநாயகன் விருதினையும் தட்டிச்சென்றார்.

Advertisement