தல தோனி சியான் விக்ரம் திடீர் சந்திப்பு. இணையத்தில் ஹிட் அடித்த புகைபடம் – இந்த மீட்டிங் எதற்கு?

Vikram
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனிக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் அதிகம். அதிலும் குறிப்பாக சென்னையில் தோனிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது நாம் அறிந்ததே. இந்நிலையில் தற்போது நேற்று ஜனவரி 31ஆம் தேதி தமிழ் நடிகர் விக்ரமை தோனி சந்தித்தது போன்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ஹிட் அடித்து வருகின்றன.

மேலும் இந்த திடீர் மீட்டிங்கிற்கு என்ன காரணம் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் தோனி விக்ரமை சந்தித்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது. விக்ரமின் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள மகான் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. அப்போது தோனி சென்னையில் இருந்ததால் விக்ரமை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

அடுத்ததாக பெங்களூருவில் வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 15 ஆவது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற இருப்பதால் இந்த ஏலத்திற்கு முந்தைய ஏற்பாடுகளை கவனிப்பதற்காக தற்போது கேப்டன் தோனி சென்னை வந்துள்ளார்.

மேலும் மெகா ஏலத்திற்கு முன்னர் சென்னை அணி திட்டம், வீரர்களை எவ்வாறு வாங்குவது போன்ற பல முன்னேற்பாடுகளை தோனி மேற்கொள்ள இருப்பதால் அவர் சென்னை வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : அவரை மாதிரி இந்திய அணிக்கு ஒரு ஆல் ரவுண்டர் கிடைப்பார் என நம்புவது முட்டாள்தனம் – கெளதம் கம்பீர்

இந்த வேளையில் தான் சியான் விக்ரமின் புதிய படத்திற்கான ட்ரெய்லர் வெளியாகவே அங்கு இருந்த தோனி அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement