ஒரே போட்டியில் இரண்டு மாற்றங்கள். அடேங்கப்பா தோனி செய்த அதிரடி – சி.எஸ்.கே முதலில் பேட்டிங்

dhoni 1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 47-வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. ஏற்கனவே சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் இந்த போட்டியில் விளையாடுவதில் எந்த ஒரு பிரச்சனையும் அவர்களுக்கு இல்லை.

- Advertisement -

அதே நேரத்தில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இனி வரும் போட்டிகளில் வெற்றி பெறுவது அவசியம் என்ற இக்கட்டான வேளையில் ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. சற்று முன்னர் நடைபெற்ற டாசிற்குப் பிறகு டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீசுவதாக கூறினார்.

பின்னர் தங்களது அணியில் உள்ள மாற்றம் குறித்து பேசிய அவர் : இந்த போட்டியில் 5 மாற்றங்களை செய்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் சென்னை அணியின் கேப்டன் தோனி சென்னையில் உள்ள மாற்றங்களை பற்றி கூறும்போது : அணியில் இரண்டு மாற்றங்கள் செய்து உள்ளதாக குறிப்பிட்டார்.

Asif

அதன்படி கடந்த போட்டியில் விளையாடிய பிராவோவுக்கு பதிலாக சாம் கரனும், தீபக் சாஹருக்கு பதிலாக கே எம் ஆசிப் ஆகியோரும் விளையாடுவதாக அறிவித்தார். மேலும் இந்த மாற்றங்கள் குறித்து பேசிய டோனி கூறுகையில் : சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடி வருவதால் வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டியது அவசியம் என்ற வகையில் இந்த ஓய்வு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : சென்னை, மும்பை வேணாம். இந்த அணிதான் சாம்பியன் ஆகனும். அதுதான் என் ஆசை – சேவாக் ஓபன்டாக்

கேரள மாநிலத்தை சேர்ந்த கே.எம் ஆசிப் கடந்த பல ஆண்டுகளாகவே சென்னை அணியில் இருந்து வருகிறார். ஏற்கனவே 2018ம் ஆண்டு சென்னை அணிக்காக அவர் இரு போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றபடி அணியில் வேறு எந்த மாற்றமும் இல்லை.

Advertisement