சென்னை, மும்பை வேணாம். இந்த அணிதான் சாம்பியன் ஆகனும். அதுதான் என் ஆசை – சேவாக் ஓபன்டாக்

Sehwag

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய 14-வது ஐபிஎல் தொடரானது வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தற்போது 60 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் 45 போட்டிகள் முடிவடைந்த நிலையில் லீக் சுற்றுப் போட்டிகள் இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ளன.

IPL
IPL Cup

இந்த தருணத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் அதிகாரபூர்வமாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதேவேளையில் சன்ரைசர்ஸ் அணி பிளே ஆப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை அதிகாரபூர்வமாக தவற விட்டுள்ளது. அதனை தொடர்ந்து மூன்றாம் இடத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கிட்டத்தட்ட வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

ஆனால் நான்காவது இடத்திற்கான போட்டியில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகின்றன. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் எது என்று பலரும் பேட்டி அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியன் ஆகும் அணி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

- Advertisement -
Ganguly-ipl
IPL MI

இதுகுறித்து அவர் கூறுகையில் : சென்னை, மும்பை போன்ற சாம்பியன் அணிகள் இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல கூடாது என்று நான் ஆசைப்படுகிறேன். ஏனெனில் இம்முறை புதிதாக ஒரு அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே என் விருப்பம். அதன்படி பெங்களூரு, டெல்லி அல்லது பஞ்சாப் ஆகிய அணிகளில் ஒன்று சாம்பியன் பட்டம் பெற்றால் சிறப்பாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

rcbvsdc

மேலும் மும்பை அணி குறித்து தொடர்ந்து பேசுகையில் : மும்பை அணி எப்போதும் பின் வரிசையில் வரும் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும். ஆனால் அனைத்து முறையும் இதே போன்று நடக்க வாய்ப்பில்லை. எனவே நிச்சயம் ஒரு புதிய அணியே இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என சேவாக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement