சென்னை ரசிகர்கள் என்னை இவ்வாறு அழைப்பதே எனக்கு மிகவும் பிடிக்கிறது – மனம் திறந்த தோனி

Dhoni
- Advertisement -

இங்கிலாந்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் தோனி இதுவரை பங்கேற்காமல் உள்ளார். மேலும் அடுத்தடுத்த தொடர்களில் தோனியை இந்திய நிர்வாகம் ஓரங்கட்டி வருகிறது. இந்நிலையில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பாக ஐபிஎல் தொடர் பார்க்கப்படுகிறது.

Dhoni

- Advertisement -

வரும் 29ஆம் தேதி ஐபிஎல் தொடரின் பதிமூன்றாவது சீசன் துவங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை அணி மும்பை அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. அதற்கான பயிற்சியில் தோனி தற்போது ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு சிஎஸ்கே அணி குறித்து பேட்டியளித்த தோனி கூறியதாவது :

சிஎஸ்கே அணி என்னை எல்லாவற்றிலும் மேம்படுத்த உதவியது. ஒரு மனிதனாகவும் சரி கிரிக்கெட் வீரராகவும் சரி என்னை சரியான பாதைக்கு அழைத்துச் செல்ல சிஎஸ்கே மிகவும் உதவுகிறது. சூழ்நிலைகளை எவ்வாறு கையாளுவது, ஆட்டத்தின் போக்கை எவ்வாறு மாற்றுவது என்பதையும் சிஎஸ்கே அணிதான் எனக்கு கற்றுக்கொடுத்தது.

Dhoni

அதுமட்டுமின்றி சிஎஸ்கே ரசிகர்கள் என்னை தல என்று அழைப்பதை நான் சிறப்பாக உணர்கிறேன். தல என்றால் சகோதரன் என்று பொருள். அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு இந்த வார்த்தையின் மூலம் வெளிப்படுகிறது. தென்னிந்திய ரசிகர்கள் என்னை தல என்று அழைக்கும் போது எனக்கு மிகவும் பிடிக்கும்.

மேலும் என் பெயரை சொல்லி யாரும் இங்கு அழைப்பதில்லை. அதற்கு பதிலாக தல என்றுதான் அழைக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு கூப்பிடுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று மனம் திறந்து டோனி பேட்டி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement