இந்திய அரசு சார்பில் 41 நாடுகளில் 42 ஆயிரம் மக்களிடம் இந்தியாவில் யார் மிகப்பெரிய பிரபலம் என்ற கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
மேலும் சுவாரசியமாக நடைபெற்றிருக்கும் இந்த கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி இந்திய அளவில் முதல் பிரபலமாக திகழ்கிறார். மேலும் மோடிக்கு அடுத்து இந்தியாவின் மிக பிரபலமானவர் என்ற இடத்தை இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி பெற்றிருக்கிறார். தோனிக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவு அதிர வைக்கிறது.
ஏனெனில் நடத்தப்பட்ட ஆய்வில் மோடிக்கு 15.66% மக்களால் விரும்பப்படும் நபராக இருக்கிறார். அதற்கு அடுத்து தோனி 8.5 விட்டு அதாவது அவருக்கு பாதிக்கு பாதி அளவில் இந்திய அளவில் பிரபலமாகி இருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் இந்தப் பட்டியலில் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் போன்ற கிரிக்கெட் வீரர்கள் இடம் பெற்றாலும் அவர்களை விட இரண்டு மடங்கு பலம் வாய்ந்த பிரபலமானவர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.
இந்த கருத்து கணிப்பு விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தோனி ரசிகர்கள் தோனியை புகழ்ந்து இந்த பதிவையும் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். தோனி ஏற்கனவே பாஜகவில் இணையப் போகிறார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது மோடியின் அளவிற்கு புகழ் பெற்று இருப்பது தோனி ரசிகர்களிடையே அதிகம் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.