தோனியும் இல்ல ! டி20 உலகக்கோப்பையில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாமே – தமிழக வீரருக்கு ரவி சாஸ்திரி ஆதரவு, ரோஹித் தருவாரா

Shastri
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மும்பை நகரில் மிகுந்த விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் ஒவ்வொரு நாளும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த தொடரில் தற்போது நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட தொடரில் அபாரமாக செயல்பட்டு புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் தற்போது முதலே கடும் பலபரீட்சை நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் இந்த வருடம் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள டு பிளசிஸ் தலைமையில் முதல் முறையாக விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தங்களது நீண்டநாள் கனவான முதல் ஐபிஎல் கோப்பையை முத்தமிட முழு மூச்சுடன் போராடி வருகிறது.

RR vs RCB DK

- Advertisement -

இந்த வருடம் களமிறங்கிய முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும் அதற்காக அசராமல் மீண்டெழுந்த அந்த அணி அடுத்த 2 போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் டாப் இடத்தை நோக்கி பயணித்து வருகிறது.

அந்த அணியில் விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் இதுவரை பெற்ற வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார். அதிலும் மிடில் ஆர்டரில் களமிறங்கும் அவர் ஒரு பினிசராக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளை தேடிக் கொடுத்தது அந்த அணிக்கு மிகப்பெரிய புத்துணர்ச்சியையும் பலத்தையும் கொடுத்துள்ளது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் முறையே 32* (14), 14* (7), 44* (23) என அதிரடியாக ரன்களை விளாசிய அவர் இந்த வருடம் ஐபிஎல் தொடரிந் முதல் 3 போட்டிகளில் ஒருமுறை அவுட்டாகாமல் அற்புதமான பினிஷராக செயல்பட்டு வருகிறார்.

Dinesh Karthik 2

வாய்ப்பு கொடுக்கலாம்:
இப்படி அதிரடியாக செயல்பட்டு வரும் அவர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாடுவதே தமது லட்சியம் என்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றியை தேடி தந்த பின் கூறியிருந்தார். ஆனால் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா போன்ற நிறைய இளம் வீரர்கள் இருப்பதால் 36 வயதை கடந்துள்ள அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் என பலரும் கருதுகின்றனர். இந்நிலையில் தினேஷ் கார்த்திக்க்கு முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆதரவு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதுவரை கிரிக்கெட் விளையாடி அவர் பெற்றுள்ள அனுபவத்திற்கும் இதர வீரர்களுக்கு ஏற்படும் காயத்தை பொருத்தும் பார்க்கும்போது அவர் சரியான திசையை நோக்கி சிந்தித்து வருகிறார். இந்த வருடம் ஐபிஎல் தொடரை சூடுபிடிக்க அனல் பறக்க தொடங்கியுள்ள அவர் இந்த சீசன் முழுவதும் அதே போல அபாரமாக செயல்படும் பட்சத்தில் நிச்சயமாக அவருக்கு வாய்ப்புள்ளது”

Shastri

“ஏகப்பட்ட அனுபவமுள்ள அவரிடம் ஏராளமான ஷாட்களும் உள்ளது. மேலும் தற்போதைய அணியில் தோனியும் இல்லாத நிலையில் கண்டிப்பாக ஒரு பினிஷரை பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. அதேசமயம் இஷான் கிஷன், ரிஷப் பண்ட் இப்பொது தினேஷ் கார்த்திக் என எத்தனை விக்கெட் கீப்பர்கள் உங்களுக்கு தேவைப் படுகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது. இவர்களில் யாரேனும் காயம் அடையும் பட்சத்தில் நிச்சயமாக தினேஷ் கார்த்திக் தாமாகவே வந்து விடுவார்” என கூறினார்.

இந்த வருட ஐபிஎல் தொடரை 204.5 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் அனல் பறக்கும் வகையில் தொடங்கியுள்ள தினேஷ் கார்த்திக் இதேபோல பட்டைய கிளப்பி நிறைய ரன்களை குவித்தால் நிச்சயமாக இந்திய அணிக்கு தேர்வாக வாய்ப்புள்ளது என ரவி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இஷான் கிஷன், ரிஷப் பண்ட் போன்ற இளம் விக்கெட் கீப்பர்கள் இருப்பதால் அவருக்கு நேரடியாக வாய்ப்பு கிடைப்பது கடினம் என கூறியுள்ள அவர் அதில் யாருக்காவது காயம் அடைந்தால் கண்டிப்பாக அந்த தருணத்தில் விளையாடுவதற்கு தினேஷ் கார்த்திக் தவிர வேறு யாரும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

dinesh1
dinesh1

அத்துடன் கடந்த காலங்களில் ஒரு அற்புதமான பினிஷராக செயல்பட்டு வந்த எம்எஸ் தோனி இல்லாத நிலையில் அவரைப் போலவே ஏகப்பட்ட அனுபவத்தைக் கொண்ட தினேஷ் கார்த்திக்க்கு நிச்சயம் வாய்ப்பு கொடுக்கலாம் என ரவி சாஸ்திரி மிகப்பெரிய ஆதரவை கொடுத்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வாக பிரகாச வாய்ப்புள்ள நிலையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் தினேஷ் கார்த்திக்கை புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா ஆதரவு கொடுத்து தேர்வு செய்வாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement