ஏன் இவ்வளவு சுயநலம் கோலி ? தோனி இருந்திருந்தா இப்படி நடந்திருக்காது – விலாசி தள்ளிய ரசிகர்கள்

Dhoni-kohli
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரிஸ்ட் சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 242 ரன்கள் அடித்தது. இந்த போட்டியிலும் கேப்டன் விராட் கோலி 3 ரன்கள் எடுத்திருந்தபோது டிம் சவுத்தி வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்து வெளியேறினார்.

Kohli-2

- Advertisement -

ஆனால் அந்த பந்து சரியாக ஸ்டம்பில் அடித்தது என்று தெளிவாக தெரிந்தும் தனது அவுட் பற்றிய சந்தேகத்தினால் ரிவியூ செய்தார். மேலும் அதனை சரியாக புரிந்துகொள்ளாத கோலி நூல் நிலையிலாவது தப்பி விடுவோம் என்ற சுயநலத்தில் ரிவ்யு எடுத்து அந்த ரிவ்யூவை வீணடித்தார். அவரின் இந்த செயல் ரசிகர்கள் இடையே சற்று கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக டிம் சவுதியின் பந்தில் 9 முறை கோலி தனது விக்கெட்டை இழந்துள்ளார் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் கோலி சவுதியின் பந்துவீச்சில் ஆட்டமிழப்பது இது 10வது முறையாகும்.
இவ்வாறு அவுட் என்று தெரிந்தும், ஏன் தேவையில்லாமல் இருக்கும் டிஆர்எஸ் முறையை பயன்படுத்தி வீன் அடித்தார் என ரசிகர்கள் விராட் கோலியை சாடி வருகின்றனர்.

Southee-3

மேலும், ஒரு கூடுதல் தகவலாக விராட் கோலி 10 முறை டிஆர்எஸ் முறையை பயன்படுத்தி அதில் இரண்டு முறை மட்டுமே தப்பியுள்ளார். இதன் காரணமாக டிஆர்எஸ் முறையில் கோலி சுயநலத்திற்காக பயன்படுத்தி வருகின்றார் எனவும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் தோனி இருந்திருந்தால் இப்படி ஆகி இருக்காது என்றும் ரிவியூ எடுப்பதில் எப்போதுமே தோனிதான் தல என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement