தோனி இந்திய கிரிக்கெட்டின் ஒரு கல்தூண்..! மற்றொன்று..! இர்பான் பதான் புகழாரம்..!

irfan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த பந்துவீச்சாளராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வந்தவர் இர்பான் பதான். 2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகம் செய்யப்பட்டார். அது பின்னர் 29 டெஸ்ட் போட்டிகள் 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
dhoni
இதுவரை டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டுகளையும் ஒரு நாள் போட்டிகளில் 173 விக்கெட்டுகளையும் குவித்துளளார் இர்பான் பதான். மேலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான கங்குலி தலைமையிலும், தோனி தலைமையிலும் விளையாடியுள்ளார். தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் 23 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வதற்கான முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் கலந்து கொண்ட இர்பான் பதானிடம் ‘நீங்கள் விளையாடிய போது இந்திய அணியை எந்த கேப்டன் சிறப்பாக வழி நடத்தினார்கள்’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பதான்.

“அனைத்து கேப்டன்களும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். கங்குலி தலைமையில் விளையாடுவது என்பது ஒரு வித்யாசமான அனுபவம். அவரது தலைமை மிகவும் பாராட்டதக்க கூடிய வகையில் இருக்கும். அதே தோனி பொறுத்தவரை அவர் இந்திய அணியின் கல் தூணை போன்றவர். தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ள கோலியும் சிறப்பாக கேப்டன்ஷிப்பை செய்து வருகிறார் ” என்று தெரிவித்துளளார்.

- Advertisement -
Advertisement