15 ஆண்டுகளுக்கு முன்னர் தோனி தோனியாக உருவான தினம் இன்று. கங்குலியின் இந்த ஒரு முடிவினால் தான் – விவரம் இதோ

dhoni3
- Advertisement -

யார் இந்த வீரர் என்று ஒரு இளைஞனை கடந்த 2005 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் உலகம் வியந்து பார்த்த தினம் இன்று. ஆம் 15 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தோனி என்ற மிகப்பெரிய ஒரு சக்தி வாய்ந்த ஒரு வீரர் உருவானது. அதன்பின்னர் தோனி எவ்வளவு பெரிய வீரராக மாறினார் என்பதை நாம் பார்த்துள்ளோம். ஆனால் தோனி உருவான போட்டி குறித்து இந்த பதிவில் காணலாம்.

sourav-ganguly-ms-dhoni

- Advertisement -

ஆம் 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் ஏற்கனவே இந்திய அணி 5 போட்டிகளில் இரண்டில் தோற்று ஒரு போட்டியில் வென்று இருந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஒரு போட்டி. கேப்டனாக இருந்த சௌரவ் கங்குலி டாஸ் வென்று பேட்டிங் செய்ய தீர்மானித்தார். வழக்கம்போல் சச்சினும் , ஷேவாக்கும் களமிறங்கினர்.

நான்காவது ஓவரிலேயே சச்சின் நடையைகட்டிக்கொண்டு அவுட் ஆகி வெளியேறிவிட்டார். அதன்பின்னர் அனுபவமான ராகுல் டிராவிட் தான் வருவார் என்று ரசிகர்கள், அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கங்குலி எப்போதும்போல் வித்தியாசமான ஒரு முடிவினை தன் மனதில் வைத்திருந்தார். 23 வயதே ஆன ஏனோதானோ என்று அசட்டுத்தனமாக மைதானத்திற்குள் ஒரு இளம் வீரரை அனுப்பி வைத்தார். அந்த வீரன் அதற்கு முன்னர் 5 போட்டிகளில் மட்டுமே ஆடி இருந்தார்.

dhoni1

அதிலும் அதிகபட்ச ரன் 12 மட்டுமே ஆகும். இவரை எப்படி மூன்றாவது இடத்தில் கங்குலி அனுப்புகிறார்? என்று பலரும் உருவத்தை உயர்த்தி கேள்வி கேட்டனர். ஆனால் அந்த இளம் வீரர் செய்தது என்ன தெரியுமா? அப்ரிடி, சோயிப் மாலிக், சக்லைன் முஷ்டாக் என அனைத்து பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களையும் துவம்சம் செய்தார். கட்டுக்கடங்காத காளையை போல் சிக்சர்களாக மைதானத்தில் பறக்கவிட்டார்.

- Advertisement -

இந்திய ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர், தொடர்ந்து அதிரடியாக ஆடி 148 ரன்கள் குவித்தார். அந்த வீரர் அவர் வேறு யாரும் இல்லை. நம் தல தோனி தான்! இந்த போட்டியில் இந்திய அணி 356 ரன்கள் குவித்தது. இந்த பிரம்மாண்ட ஆட்டம் தான் தற்போது வரை இந்திய கிரிக்கெட் வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறது. இந்த போட்டி முடிந்த பின்னர் கங்குலி தோனியை களமிறக்கியது பற்றி பேசினார் :

msdhoni

தோனி மிகவும் திறமையான வீரர். அவருடைய கட்டுக்கடங்காத ஆற்றலை பயன்படுத்த நினைத்தேன். அதன் காரணமாகவே அவரை முன்னரே களமிறக்கினேன். அதற்கேற்ப துவம்சம் செய்தார். அதற்கு முன்னர் வரை தோனியை 7ஆம் இடத்தில் தான் இறக்கினேன். என் நம்பிக்கையை வீணாக்காமல் அதிரடி காட்டி விட்டார் தோனி. என்று கூறியிருந்தார் கங்குலி! அந்த தினம் இன்று தான்!

Advertisement