அன்று யுவ்ராஜ். இன்று ஜடேஜா இருவரின் சிக்ஸர்களுக்கு பின்னால் இருந்த ராஜ தந்திரி தோனி – அப்படி அவர்செய்தது என்ன ?

Thala dhoni

கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் தொடர்ச்சியாக 6 சிக்சர்கள் விளாசி 12 பந்துகளில் அதிவேக சதம் அடித்து உலக சாதனை படைத்திருந்தார். அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி மறுமுனையில் யுவராஜ் உடன் பேட்டிங் நின்றுகொண்டிருந்தார். அதேபோன்று நேற்றைய போட்டியில் ஹர்ஷல் பட்டேல் வீசிய ஓவரில் ஜடேஜா 4 சிக்சர்கள் ஒரு பவுண்டரி என 37 ரன்களை குவிக்கும்போதும் தோனி மறுமுனையில் நின்று கொண்டிருந்தார்.

Yuvi 3

பொதுவாகவே கீப்பர்களுக்கு ஒரு குணம் உண்டு. ஒரு பௌலர் எதுபோல பந்து வீசுவார் என்பதை அவர்களால் சற்று கணிக்க முடியும். அதில் தோனி கைதேர்ந்தவர் என்பதை பல சமயங்களில் நாம் பார்த்திருக்கிறோம். பலருக்கு அவர் இதுகுறித்து சில டிப்ஸ்கள் கூறியதையும் நாம் கேள்வி பட்டிருக்கிறோம். சில சமயங்களில் அவர் கூறும் டிப்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய அளவில் உதவியும் இருக்கிறது. அந்த வரிசையில் யுவராஜும், ஜெட்டுவும் முதல் இடத்தில் உள்ளனர்.

இந்த இரண்டு வீரர்கள் அடித்த சிக்ஸர்களுக்கும், அவர்களது பிரம்மாண்ட ஆட்டத்திற்கும் தோனியின் அறிவுரை பெரிதளவு உதவி உள்ளது என்றால் அது மிகை அல்ல. ஏனெனில் நேற்று தோனி ஜடேஜாவிற்கு வழங்கிய டிப்ஸ் குறித்து போட்டி முடிந்து ஜடேஜாவே பேசினார். அதாவது கடைசி ஓவரில் பவுலர் எந்த திசையில் பந்து வீச போகிறார் என்பதை முன்கூட்டியே கணித்த தோனி ஜடேஜா விடம் பந்து அந்த திசையில் தான் வரப்போகிறது தயாராக இரு என்று கூறியாதாக ஜடேஜா பேசினார்.

அதனை அப்படியே செயல்படுத்திய ஜடேஜாவும் ஹர்ஷல் பட்டேல் வீசிய ஓவரை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களைக் குவித்தார். அதேபோன்றுதான் யுவராஜ் சிங் 6 சிக்சர்கள் அடித்த அந்த ஓவரிலும் பிராடு எந்த திசையில் பந்து வீசுவார் என்று டோனி முன்கூட்டியே கணித்து அவரிடம் கூறியிருந்தார். அதனை ஏற்றுக்கொண்ட யுவராஜும் 6 சிக்சர்கள் அடித்திருந்தார். அப்படி பவுலர் எந்த இடத்தில் பந்துவீச போகிறார் என்பதை முன்கூட்டியே கணித்து தோனி கொடுத்த டிப்ஸ்கள் இவர்கள் இருவருக்கும் கூடுதல் பலம் சேர்த்துள்ளது. 99.9% அவை பேட்ஸ்மேன்களின் திறமை என்றாலும் .1% அதில் தோனியின் ராஜ தந்திரமும் அடங்கியுள்ளது. இதை பேட்ஸ்மேன்களும் வெளிப்படையாகவே கூறியுள்ளனர்.

Jadeja

- Advertisement -

அவர்கள் இருவரும் ரன்களை குவிக்கும்போதும் தோனி மறுமுனையில் இருந்து எந்த திசையில் பவுலர் பந்து வீச போகிறார் என்பதையும் அதற்கு நீங்கள் எவ்வாறு தயாராகிக் கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறார். ஒரு கேப்டனாக, ஒரு வீரராக தோனியின் சில கணிப்புகள் தவறாமல் இருந்துள்ளது.

அவரது இந்த சரியான கணிப்புகள் காரணமாக அணியை வெற்றி பெற செய்தது மட்டுமின்றி மற்ற வீரர்களின் சிறப்பான ஆட்டமும் வெளிக்கொணற தோனி மறைமுகமாக உதவியுள்ளார். அதுமட்டுமின்றி இக்கட்டான பல போட்டிகளில் தோல்வியில் அணி இருக்கும் போது அதனை மாற்றி வெற்றிப்பாதைக்கு திருப்பும் தன்மையும் தோனியிடம் உள்ளதை நாம் பல போட்டிகளில் கண்டுள்ளது மறுக்கமுடியாத உண்மை.