இன்னைக்கு மட்டும் நல்லா ஆடலானா எப்போவும் சி.எஸ்.கே டீம்ல ஆட முடியாது – தோனி எடுத்துள்ள அதிரடி முடிவு

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 21 ஆவது லீக் போட்டி இன்று அபுதாபி மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்று (07/10/2020) இரவு ஏழு முப்பது (7.30 pm ) மணிக்கு துவங்கும் இந்தப் போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சம பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் இப்போட்டிக்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. மேலும் மூன்று தொடர் தோல்விகளுக்கு பிறகு கடந்த போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் அசத்தல் பார்ம்மிற்கு திரும்பியுள்ள சிஎஸ்கே அணி தனது வெற்றிப் பயணத்தை தொடரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கான வீரர்களின் தேர்வு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இருப்பினும் தோனி தன்னுடைய பழைய அணியை கொண்டே போட்டியில் களம் இறங்குவார் என்று தெரிகிறது. மேலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாட்சன் கடந்த போட்டியில் பார்மிற்க்கு திரும்பியுள்ளார். மேலும் டு பிளிசிஸ், ராயுடு, ஜடேஜா என அனைவரும் பார்மிற்க்கு வந்துவிட்டனர்.

faf

பவுலிங்கில் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், பிராவோ ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். எனவே இந்த போட்டியில் நிச்சயம் கேதர் ஜாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஏனெனில் இந்த தொடரின் தொடக்கத்தில் மட்டுமல்ல கடந்த இரண்டு வருடமாக அவர் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் சமூக வலைதளங்கள் ரசிகர் மத்தியில் கடும் விமர்சனத்தை பெற்று வரும் அவருக்கு தோனி மட்டுமே ஆதரவாக இருந்து வருகிறார்.

Jadhav 1

ஆனால் இந்த போட்டியிலும் ஜாதவ் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை என்றால் இதுவே அவருடைய கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் சிஎஸ்கே அணியில் ஜெகதீசன் என்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இருக்கிறார். அவருக்கு வாய்ப்பு அளிக்கும் கட்டாய முடிவை எடுக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement