நான் விலகிக்குறேன். நீங்களே பாத்துக்கோங்க. தல தோனி எடுத்த அதிரடி முடிவு – நிர்வாகம் வரவேற்பு

Dhoni
Advertisement

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் தங்களது பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் 4 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்து மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அணியின் கேப்டனாக செயல்பட இருந்த மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

இதன்காரணமாக சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக ஜடேஜா தலைமையில் சென்னை அணி எவ்வாறு செயல்படப் போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் தற்போது சிஎஸ்கே அணி தொடர் சரிவை சந்தித்து வருவது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சிஎஸ்கே அணியின் இந்த தொடர் தோல்விகளுக்கு சில காரணங்கள் இருந்தாலும், ஜடேஜா கேப்டன்சி அழுத்தங்களை சரியாக கையாளவில்லை என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள். மேலும் சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியிருந்தாலும் ஜடேஜா இக்கட்டான வேளையில் இருக்கும்போதெல்லாம் தோனியே கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவரே முடிவுகளை எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.

MS Dhoni Jadeja

அதோடு ஜடேஜாவும் இக்கட்டான வேளைகளில் நீங்களே கேப்டன்சி செய்யுங்கள் என்று தோனியிடம் கூறியதாகவும் சொல்லப்பட்டது. அதனால் தோனி இக்கட்டான வேளைகளில் கேப்டனாக செயல்பட்டு வந்தார் என்றும் கூறப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் சிஎஸ்கே அணி மீட்டிங்கில் தற்போது தோனி ஒரு புதிய முடிவை எடுத்துள்ளதாகவும் அதில் இனிமேல் ஜடேஜா முழுநேர கேப்டனாக செயல்பட வேண்டும் என்றும் அவருக்கு ஆலோசனை தேவைப்பட்டால் மட்டும் நான் சிலவற்றை வழங்குகிறேன் என்றும் கூறியிருக்கிறார். ஜடேஜா முழுவதுமாக கேப்டன்சி செய்தால் மட்டுமே அவருடைய ஆட்டம் இன்னும் மேம்படும் என்றும் தோனி கூறியுள்ளர்.

இதையும் படிங்க : ரொம்ப சூப்பரா ஆடுறாரு. இவரோட பேட்டிங் விராட் கோலி மாதிரியே இருக்கு – இளம்வீரரை புகழ்ந்த ரவி சாஸ்திரி

அதோடு ஜடேஜா முழுவதுமாக கேப்டன்சி செய்தால் மட்டுமே இன்னும் போட்டியினை நன்கு அறிந்து கொள்வார் என்பதனாலும் தோனி இந்த முடிவை எடுத்துள்ளதால் நிர்வாகிகளும் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காமல் தோனியின் முடிவை ஏற்றுக்கொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement