ருதுராஜ் கெய்க்வாட்டின் இந்த சிறப்பான பேட்டிங்கிற்கு தோனிதான் காரணம் – சி.எஸ்.கே நிர்வாகி தகவல்

ruturaj
- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அந்த தொடரில் சீனியர் வீரர்களின் மோசமான செயல்பாடு காரணமாக சென்னை அணி அந்த மோசமான தோல்விகளை சந்தித்தது. அதன் காரணமாக அந்த தொடரில் கடைசியில் இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் துவக்க வீரராக அணியில் வாய்ப்பினை பெற்றார்.

ruturaj

- Advertisement -

தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய கெய்க்வாட் மூன்று அரை சதங்களை அடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து துவக்க வீரராக விளையாடி வரும் அவர் இந்த தொடரில் ஒரு சதம் அடித்தது மட்டுமின்றி 533 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

சமீபத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது 60 பந்துகளில் 101 ரன்களை அடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டின் இந்த சிறப்பான பேட்டிங்க்கு தோனியின் அறிவுரைகள் தான் காரணம் என சிஎஸ்கே நிர்வாகி ஒருவர் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனி எப்போதுமே கெய்க்வாட்டிடம் சில அறிவுரைகளை கூறி கொண்டே இருப்பார். அதன்படி சமூக வலைத்தளத்தில் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்றும் எப்போதும் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை மட்டுமே கூறிக் கொண்டிருப்பார்.

Ruturaj-3

அதுமட்டுமின்றி போட்டியில் வெற்றி தோல்வி எல்லாம் சகஜம் என்பதனால் அணியின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எவ்வாறு விளையாட வேண்டும், எப்படி ரன் ரேட்டை அதிகரிக்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும் தோனி அவரிடம் கூறிக் கொண்டே இருப்பாராம். அதுமட்டுமின்றி நன்றாக விளையாடினால் உன்னை மக்கள் பாராட்டுவார்கள். அதே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் விமர்சனங்களை எழுப்புவார்கள் என்று அடிக்கடி அறிவுரை கூறிக் கொண்டே இருப்பாராம்.

- Advertisement -

இதையும் படிங்க : அதிசயம் நடந்தால் மட்டுமே மும்பை அணி பிளே ஆப்புக்கு செல்லும். எப்படி தெரியுமா ? – விவரம் இதோ

மேலும் இந்த ஆண்டு துவக்கம் முதலே அவருக்கு சுதந்திரம் கொடுத்து விளையாட வைத்ததால் அவரால் சிறப்பாக விளையாட முடிந்தது என்றும் அந்த நிர்வாகி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement