அதிசயம் நடந்தால் மட்டுமே மும்பை அணி பிளே ஆப்புக்கு செல்லும். எப்படி தெரியுமா ? – விவரம் இதோ

MI
- Advertisement -

நடப்பு 14-வது ஐபிஎல் தொடரின் கடைசி இரண்டு லீக் போட்டிகளும் தற்போது ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் பெங்களூரு மற்றும் டெல்லி ஆகிய அணிகள் ஒரு போட்டியிலும், சன்ரைசர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு போட்டியிலும் விளையாடி வருகின்றனர். ஏற்கனவே டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் இந்த போட்டியின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகம் காணப்படவில்லை.

mivssrh

- Advertisement -

ஆனால் மற்றொரு ஆட்டமான சன்ரைசர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனெனில் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பெரிய வித்தியாத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு நுழைய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை அணி தற்போது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி இன்றைய போட்டியில் மும்பை அணி பெரிய வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தினால் மட்டுமே கொல்கத்தா அணியை கீழே தள்ளி 4 ஆவது இடத்தினை பிடிக்க முடியும். ஆனால் அது கனவிலும் முடியாத காரியமாக பார்க்கப்படுகிறது.

mi 1

ஏனெனில் இன்றைய போட்டியில் மும்பை அணி முதலாவதாக பேட்டிங் செய்து பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அது மட்டுமின்றி 171 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்த வேண்டும். அப்படி 171 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டுமென்றால் மும்பை அணி முதல் இன்னிங்சில் கிட்டத்தட்ட 250 ரன்களைக் குவிக்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : கோலி, ரோஹித்தை விட இவர் ரொம்ப ட்லேன்ட்டான பிளேயர். அதுல சந்தகமே இல்லை – கம்பீர் வெளிப்படை

அதுமட்டுமின்றி 80 ரன்களுக்குள் ஐதராபாத் அணியை வீழ்த்த வேண்டும். ஆனால் டீ20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இது சாத்தியம் அல்ல என்றும் ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே மும்பை அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இந்த போட்டி டாஸின் போதே முடிவடைந்தது என்று கூறலாம்.

Advertisement