கோலி, ரோஹித்தை விட இவர் ரொம்ப ட்லேன்ட்டான பிளேயர். அதுல சந்தகமே இல்லை – கம்பீர் வெளிப்படை

Gambhir
- Advertisement -

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் வேளையில் ஒரு சில அணிகளை தவிர மற்ற அணிகள் அனைத்தும் தங்களது அனைத்து போட்டிகளையும் விளையாடி விட்டன. அதன்படி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி நிர்ணயித்த 135 ரன்கள் இலக்கினை பஞ்சாப் அணியானது 13 ஓவர்களில் விளாசித் தள்ளியது. இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் நின்று 42 பந்துகளில் 98 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

PBKSvsCSK

- Advertisement -

அவரது இந்த பிரமாதமான ஆட்டத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீரும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : உங்களால் இதுபோன்று அதிரடியாக விளையாட முடியும் என்றால் நீங்கள் ஏன் இதை தொடரக்கூடாது ? நிச்சயம் ராகுல் இதே போன்ற ஆட்டத்தை தொடர்ந்து விளையாட வேண்டும் அதுவே என்னுடைய விருப்பம்.

அதுமட்டுமின்றி ரோகித் சர்மா, விராத் கோலியை விட கே.எல் ராகுல் நல்ல திறமை வாய்ந்தவராக இருக்கிறார். நான் இதை வெறும் வார்த்தைகளாக கூறவில்லை. கே.எல் ராகுல் இந்த போட்டியில் விளையாடிய விதத்தை நீங்கள் பார்த்திருந்தால் உங்களுக்கு அது புரிந்திருக்கும். அவரால் மற்ற இந்திய வீரர்களை விட அதிக ஷாட்டுகளை விளையாட முடிகிறது. 135 ரன்களை எதிர்த்து விளையாடும் போது 13 ஓவர்களில் அவரால் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடிகிறது.

rahul

அதுமட்டுமின்றி தோனியால் கூட எந்த ஒரு இடத்திலும் ராகுலை தடுத்து நிறுத்த முடியவில்லை. அந்த அளவிற்கு அவர் சிஎஸ்கே பவுலர்களை அடித்து நொறுக்கினார். இந்த போட்டியில் அவர் அடித்த சிக்சர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்தன என்று கம்பீர் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

- Advertisement -

rahul

இதே போன்று அவர் துவக்கத்திலிருந்தே விளையாடி இருந்தால் நிச்சயம் பஞ்சாப் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது மட்டுமின்றி இறுதியில் வெற்றியும் பெற்றிருக்கும். ஆனால் அவருடைய கேப்டன் பொறுப்பு காரணமாக தொடர்ச்சியாக அவரால் அதிரடியாக விளையாட முடியாமல் போனது.

இதையும் படிங்க : இன்னும் 2 நாள் தான் இருக்கு. இந்திய அணியில் ஏற்படவுள்ள 3 முக்கிய மாற்றங்கள் – பி.சி.சி.ஐ ஆலோசனை

என்னை பொருத்தவரை நிச்சயம் அவர் அருமையான திறமை வாய்ந்த வீரர். அவரால் மற்ற எந்த இந்திய வீரர்களை விட சிறப்பாக விளையாட முடியும். எனவே தான் அவரை ரோகித் சர்மா மற்றும் கோலியை விட அவர் திறமையான வீரர் என்று நான் கூறுகிறேன் என் கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement