இன்னும் 2 நாள் தான் இருக்கு. இந்திய அணியில் ஏற்படவுள்ள 3 முக்கிய மாற்றங்கள் – பி.சி.சி.ஐ ஆலோசனை

BCCI
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் தொடரானது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. லீக் சுற்றுப் போட்டிகள் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் இந்த தொடரானது இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ளது. அதனை தொடர்ந்து அக்டோபர் 17ஆம் தேதி துவங்கும் டி20 உலகக்கோப்பை தொடரானது அங்கேயே நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அணியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் இந்திய அணியும் இம்மாத துவக்கத்தில் இந்த தொடருக்கான இந்திய வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

IND

- Advertisement -

இந்நிலையில் பிசிசிஐக்கு தற்போது வீரர்களின் தேர்வில் இடம்பெற்றுள்ள சில வீரர்களின் மோசமான பார்ம் காரணமாக பிரச்சனை உண்டாகியுள்ளது. அதன்படி இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஹார்திக் பாண்டியா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் போன்றோருடைய மோசமான பார்ம் தற்போது இந்திய அணியை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே ஹார்டிக் பாண்டியா பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது பந்து வீசாமல் இருந்துவரும் பாண்டியா பேட்டிங்கிலும் பெரிதாக சோபிக்கவில்லை. இதன் காரணமாக அவரை நீக்கிவிட்டு ஷர்துல் தாகூர் அல்லது தீபக் சாஹர் ஆகிய இருவரில் ஒருவரை அணியில் சேர்க்க வேண்டும் என்று கருத்துக்கள் எழுந்து வருகிறது.

pandya

அதேபோன்று சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக மீண்டும் இந்திய அணியில் ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை சேர்ப்பது என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த மூன்று முக்கிய விடயங்கள் குறித்தும் பிசிசிஐ நிர்வாகிகள் விவாதிக்க இருக்கின்றார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : தீபக் சாஹரின் இப்படி ஒரு ப்ரபோசலுக்கு காரணமே தல தோனி தானாம் – அவரே கூறிய தகவல் இதோ

இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே முக்கிய நோக்கமாக கருத்தில் கொள்ளப்பட்டு எந்த ஒரு வீரரையும் நீக்க பாராபட்சம் பார்க்கக்கூடாது என்ற கருத்து உள்ளதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த அணியை மாற்ற இன்னும் இரு தினங்கள் மட்டுமே வாய்ப்பு உள்ளதால் நிச்சயம் ஏதாவது ஒரு அதிரடி மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத் தக்கது.

Advertisement